குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர சிற்றுண்டி – காரட் சேமியா பாத்

மாலை நேர டிபன் வகைகள்

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

சிறியவர்கள்  விருப்பமாக உண்ணும் டிபன் இது. உப்புமா போலத்தான். கடைகளில் வறுத்த சேமியா கிடைக்கிறது. ஆதலால் சுலபமாகவே தயாரிக்கலாம்.
வேண்டியவை:
வறுத்த சேமியா – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று பெரியதாக இருக்கட்டும். சாம்பார் வெங்காயம் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
பச்சைப் பட்டாணி – விருப்பத்திற்கு
டொமேடோ – 2
காரட் துருவல் – அரை கப் (காரட்டைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.)
பச்சைமிளகாய் – 1
இஞ்சித் துருவல் – வாசனைக்குச் சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிது
லவங்கம் – 1
எண்ணெய் – 4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி, கறிவேப்பிலை – விருப்பத்திற்கு.
செய்முறை:
மிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒண்ணரை கப் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகை வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, வெங்காயம்   இஞ்சி பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
லவங்கத்தைத் தட்டிச் சேர்த்து,உப்புடன் தக்காளியையும் சேர்த்து  சுருள வதக்கவும். இப்போது காரட் துருவலைச் சேர்த்து லேசாக வதக்கி சேமியாவைச் சேர்க்கவும். தீயை நிதானமாக்கி கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்துக் கிளறிவிடவும். தட்டினால் மூடி வேக விடவும். அடிக்கடி கிளறி மூடவும். சேமியா வெந்ததும்,  நெய் சேர்த்துக் கிளறி இறக்கி,  வேறு பாத்திரத்தில் மாற்றி
முந்திரி, கொத்தமல்லி ,கறிவேப்பிலையால்  அலங்கரிக்கவும். துளி சர்க்கரையுடன்  சிறு பிள்ளைகளுக்குச் சாப்பிட மிகவும் பிடிக்கும்.

P1030173
பெரியவர்களுக்கு சிறிது காரம் அதிகம் சேர்த்தால் நல்லது இல்லையா? வறுத்த சேமியா அதன் கலருடன் காரட் போர்வையில் அழகு இல்லையா? காலிஃப்ளவர், கோஸ், ப்ரகோலியும் சேர்க்கலாம். தக்காளிக்குப் பதில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s