காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறிகளின் வரலாறு – 28

முட்டைகோஸ்

DSCN3025

போர்த்துக்கீசியர்களால் 14 அல்லது 17ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் முட்டைகோஸ். வரலாற்றாசிரியர்கள் முட்டைகோஸின் பிறப்பிடம் பாறை மலைகள் சூழ்ந்த ஐரோப்பிய பிரதேசங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஐரோப்பியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறி என்றாலும் இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ் விளைச்சலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதேபோன்று இந்திய உணவுகளிலும் முட்டைகோஸ் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

எது நல்ல முட்டைகோஸ்?

முட்டைகோஸ் விளையும்போது பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது. அதனால் அதிகஅளவு பூச்சிக்கொல்லிகள் இதன்மேல் தெளிக்கப்படுகின்றன. வெள்ளை வெளேர் என்று இருக்க அறுவடைக்குப் பின் வேதியியல் கரைசலில் முக்கிய பிறகே விற்பனைக்கு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதனால் பளீரென இல்லாமல் வெளிர் பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருக்கும் முட்டைகோஸை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு பூச்சிகள் உண்டிருந்தாலும் முட்டைகோஸ் மலர்ச்சியாக இருக்கும்பட்சத்தில் வாங்கி சுத்தமாக கழுவி பயன்படுத்தலாம். சிலர் முட்டைகோஸின் மேல் இருக்கும் சில இதழ்களை பறித்து எறிந்துவிட்டு, மற்றதை வெட்டி அப்படியே கழுவாமல் பயன்படுத்துவார்கள். அப்படியே பயன்படுத்தவே கூடாது. முக்கியமான காரணம், முட்டைகோஸின் மேல் அடிக்கும் மருந்துகள் அப்படியே கரைந்துபோகாமல் இருக்கும் என்பதுதான்.

முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்:

முட்டைகோஸ் ஒரு நாளின் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத் தேவையை தீர்க்கக்கூடியது. கார்போஹைட்ரேட் 5.8 கி, சர்க்கரை 3.2கி, நார்ச்சத்து 2.5 கி, புரதம் 1.28 கி, கொழுப்பு 0.1கி அளவில் அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ்,சோடியம், ஜின்க், மக்னீஷியம், ஃபுளோரைடு போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளன. சரி, முட்டைகோஸில் ஒரு சுவையான ரெசிபி இதோ…

DSCN3033

முட்டைகோஸ் மசாலா கூட்டு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கிண்ணம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கிண்ணம்

பாசிப்பருப்பு – கால் கிண்ணம்

பட்டை – ஒரு துண்டு

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

தேங்காய்த் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 4

கொத்துமல்லித்தழை – சிறிது

தாளிக்க:

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

கடுகு – கால் தேக்கரண்டி

சீரகம் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் பாசிப்பருப்பைப் போட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸை போடவும். இரண்டும் சேர்ந்து வெந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் இவைகளை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்து வெந்த கலவையில் கொட்டவும். பின்னர் உப்பு போட்டு கொதிக்க வைத்து கடுகு, சீரகம்  தாளித்து கொட்டவும். அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித்தழைத் தூவி சாப்பிட பயன்படுத்தவும். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது கூட்டணி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s