வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இந்த படத்தினை இயக்குநர் சாமி இயக்குகிறார். பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. பாடல் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நாயகனாக அர்ஜூனா நடிக்கிறார். நாயகிகளாக பிரியங்கா மற்றும் வர்ஷா அஷ்வதி நடிக்கிறார்கள். அண்ணன், தங்கை உறவின் பாசத்தை வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றது. ஆபத்தான மேட்டுப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் நாயகி பிரியங்காவிற்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த ஆசை என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் கேமரா வைக்க பயன்படுத்தப்படும் 60 அடி ராட்சத கிரேனில் ஏறி பள்ளத்தாக்கினை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். தைரியமாக அந்த கிரேனில் ஏறி அமர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.