எங்கே செல்லும் இந்த பாதை?
மகேஸ்வரி்
சமூக வலை தளங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் மே தினம் பற்றிய தகவல்களை மக்களிடம் பறிமாறிக் கொண்டிருக்கும்போது வெகுஜன மக்களை அதிகமாக ஆதிக்கம் செய்யும் காட்சி ஊடகங்கள் மே தினத்தை எப்படிக் கையாண்டார்கள், அதை எப்படி இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பதை சொல்வதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
மே தினத்தன்று மாலை ஒரு பிரபலமான பொழுதுபோக்கு காட்சி ஊடகத்தில் என்றென்றும் நயன்தாரா என்ற நிகழ்ச்சியை ஒரு தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர்கள் அமைத்திருந்த விதம்தான் மிகவும் கேலிக்குறியதாக இருந்தது.
ஒரு பிரமாண்டமான அரங்கில் நடிகை நயன்தாரா அமர்ந்திருக்கிறார். அவரின் எதிர்பக்கத்தில் இருபது இளைஞர்களுக்கும் அதிகமாகவே அமர்ந்திருந்தார்கள். நடுவில் தொகுப்பாளினி. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொகுப்பாளினி இளைஞர்களிடம், தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்லும் இளைஞருக்கு பரிசாக நயன்தாராவின் கையினால் ஒரு ரோஜாப்பூவுடன் நயன்தாராவின் கையெழுத்திட்ட அட்டை அவரால் வழங்கப்படும் எனக் கூறினார்.
அவர் கேட்ட கேள்விகள்:
நடிகை நயன்தாராவின் பிறந்த தேதி என்ன?
சந்திரமுகி படத்தில் நடிகை நயன்தார ஏற்று நடித்த கதாபாத்திரன் பெயர் என்ன?
நடிகர் விஜயுடன் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த படத்தில் வரும் பாடல்?
நயன்தாரா நடித்த படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் இரண்டு கூறவும்?
கடைசி கேள்விக்கு அவர் வந்தபோது சொன்ன விசயம்தான் நெஞ்சை பதைபதைக்கச் செய்தது. அதாவது இந்த கடைசி கேள்வியை நடிகை நயன்தாராவே கேட்பார். அவர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொல்லும் நபருக்கு சிறப்புப் பரிசாக ரோஜா பூ மற்றும் நயன்தாராவின் கையைழுத்து வாழ்த்து அட்டையுடன் அவரின் மூச்சு காற்று அடைக்கப்பட்ட ஒரு பலூனும்(லவ்டப்பதியாம்) அவர் வழங்குவார் என அவர் கூறிய விஷயம்தான் நெஞ்சை அடைப்பதாக இருந்தது.
நடிகை என்றாலும் அவருக்கு நடிப்பு உழைப்பு தானே. அவருக்கு அது வருமானம் தரக் கூடிய ஒரு தொழில் அவ்வளவே. நடிகை என்பதற்காக அவரின் சுயசரிதையை இப்படி எல்லாம் யோசித்து ஒரு நிகழ்ச்சியை மே தினம் போன்ற ஒரு சிறந்த நாளில் நடத்தி, இவர்கள் இளைஞர்களை வழிநடத்தி எங்கே கொண்டு செல்கிறார்கள்.
நல்ல நிகழ்வுகளையும், சிந்தனைகளையும், தகவல்களையும் பொழுதுபோக்காக வழங்க எத்தனையோ வழிமுறைகள் இருக்க காட்சி ஊடகங்கள் உட்கார்ந்து யோசித்து மே தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை இளைஞர்களை வைத்து எப்படி எல்லாம் வழங்குகிறார்கள்?
இதே போன்று கல்லூரி இளைஞர்களை வைத்து வேறொரு காட்சி ஊடகம் தமிழ் பேசுங்க தலைவா என்ற நிகழ்ச்சியை வழங்கியது அதில் வந்த இளைஞர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். அவர்களிடம் தொகுப்பாளர் தேவநேயப் பாவாணர் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்தப் படத்தில் இருப்பவர் யார் எனக் கேட்டதற்கு பெரும்பாலான மாணவர்கள் அளித்த பதில் (தெரியவில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை!) வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதுதான்..
எங்கே செல்லும் இந்தப் பாதை…?
கட்டுரையாளர் பற்றி: நிருபர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என 15 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார் மகேஸ்வரி .
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.
தற்போது பதிவை இணைக்கலாம்.
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
http://www.Nikandu.com
நிகண்டு.காம்
ஊடகங்களின் அசட்டுத் தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்ய் விட்டது. இப்படித்தான் சமீபத்தில் சிவா கார்த்திகேயனை கல்லூரிப் பெண் ஒருத்தியை முத்தமிடச் செய்தது.
பெண்கள் ஒன்றிணைந்து எதிப்புக்குரல் கொடுக்கவேண்டும்