சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் – 1
தக்காளி ஆரஞ்சு கூலர்
தேவையானவை:
நன்றாக பழுத்த தக்காளி – 2
ஆரஞ்சு – 2
குளுக்கோஸ் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை.
செய்முறை:
தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும்.
குளுக்கோஸுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.