சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

வடாம் போடலாம் வாங்க – 3

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

பெயர்தான்  மோர் மிளகாயே தவிர மிளகாய் ஊறுவதென்னவோ தயிரில்தான். ஊறுகாய் மிளகாயென்ற ஒரு பெயரும் உண்டு. எண்ணெயில் வறுத்துச் சாப்பாட்டு வகைகளுடன் சாப்பிட ஏற்றது. தஞ்சாவூர் குடமிளகாய் வகையில் செய்தோமானால் மிகவும் அருமையாக இருக்கும். இவ்விடம் சென்னையில் குட்டிக் குட மிளகாய் கிடைத்தது. பச்சை மிளகாயிலும், குடமிளகாயிலும் மோர் மிளகாய் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  வந்திருக்கிறேன்.
வேண்டியவை:
குடமிளகாய் – 3 டம்ளர்கள்
தயிர் (கெட்டியானது) – 1 டம்ளர்
உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் காரத்தைப் பொறுத்து உப்பு அதிகம் தேவைப்படும்
அல்லது நாம் ஸாதாரணமாக உபயோகப்படுத்தும் அதிகக் காரமில்லாத சிறியசைஸ்
பச்சை மிளகாய்கள் – 20
தயிர் – 1 டம்ளர்
உப்பு – 3 டீஸ்பூன்.
செய்முறை:
P1030140

மிளகாய்களை நன்றாகத் தண்ணீரில் சுத்தம் செய்து வடி கட்டி ஈரம் போகத் துடைக்கவும். எந்த மிளகாயாக இருந்தாலும் காம்பைச் சிறிது வைத்து மீதி காம்பை நீக்கிவிடவும்.
மிளகாயின் நுணியில் சிறிது கீறி  விடவும். எல்லா மிளகாயையும் இம்மாதிரி காம்பையும் சிறிதாக்கி, நுணியையும் கீறவும். தயிரைத் தண்ணீர் விடாது கடைந்துக் கொள்ளவும்.

P1030143
ஒரு அகலமான பாத்திரத்தில், மிளகாயைப்  போட்டு, தயிரைச் சேர்த்து, உப்பையும் கலந்து  வேறு ஒரு பாட்டிலிலோ, பீங்கான் ஜாடியிலோ எடுத்து வைத்து ஊறவைக்கவும். அழுத்தமாக மூடி வைக்கவும். மறுநாள் சற்றுப் பிழிந்தாற்போல மிளகாயை எடுத்து, நல்ல வெயிலில், பாலிதீன் ஷீட்டின் மேலோ,  பீங்கான் தட்டுகளின் மீதோ, பரவலாக மிளகாயைப் பரத்தி
காய வைக்கவும். கூடவே தயிர்க் கலவையையும் ஒரு மெல்லிய துணியினால் மூடி வெயிலில் வைக்கவும். வெயில் போன பிறகு மிளகாயை எடுத்து மறுபடியும் அதே தயிருடன் கலந்து ஊறவைக்கவும். ஒருநாள் விட்டு ஒருநாள் வெயிலில் மிளகாயைக் காய வைக்கவும்.  தயிர் மிகவும் குறைந்து விட்டால் மேலும் சிறிது தயிர் அதனுடன் விட்டுப் பிசறி வைக்கலாம்.
காயகாய, மிளகாய், வெளுத்துச் சுருங்கும். தயிரையும் மிளகாய் இழுத்துக் கொண்டு விடும். மிளகாய் நன்றாகக் காய்ந்தவுடன் உப்பு, தயிர்த் துகள்கள் பொடியாக உதிரும்.

P1030152

P1030153
வெயிலில் நாம் காய வைப்பதைப் பொருத்து அவைகள் தயாராகும். நன்றாகக் காய்ந்த தயிர் மிளகாயை  அழுத்தமான மூடியுடன் கூடிய பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் வேண்டும்போது, எடுத்து வறுத்துக் கொள்ளலாம். வேண்டும்போது இரண்டு ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, 5, 6 மிளகாயைப் போட்டுச் சற்று கருக வறுத்து உபயோகிக்கவும். தயிரில் ஊறினதால்,மணத்துடன்,உப்பு காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும். ஊறும்போதே அந்த மிளகாய்கள் பச்சையாகவும், உணவுடன் சேர்த்துச் சாப்பிடவும். நன்றாக இருக்கும்.

P1030161

P1030164
கெட்டியான புளிக் கரைசலில் மிளகாயை ஊற வைத்தும் புளி மிளகாய் தயாரிக்கலாம். நிறம் சற்று மாறுதலாக இருக்கும். முறை என்னவோ தயிருக்குப் பதில், கெட்டியான புளிக்கரைசல். அவ்வளவேதான். இந்த மோர் மிளகாய் மோர்க்களி,மோர்க்குழம்பு, இட்டிலி ஸாதாளிப்பு, தயிர்சாதம் முதலானவைகளுக்கு இன்றிமையாதது.

Advertisements

1 thought on “சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s