அஞ்சலி, இந்த வார புத்தகங்கள், புத்தக அறிமுகம், புத்தகம்

புத்தக அறிமுகம்- தனிமையின் நூறாண்டுகள்

புத்தக அறிமுகம்

இலத்தீன் அமெரிக்கா எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கோஸ் நேற்று முன் தினம் (17 ஏப்ரல் 2014) காலமானார்.  மார்ச் 6, 1927ல் கொலம்பியாவில் பிறந்தவர் மார்க்கோஸ் . பத்திரிகையாளராக தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய இவர், பின் முழுநேர எழுத்தாளராகி தன் படைப்புகளின் மூலம் உலக இலக்கிய வாசகர்களால் கொண்டாடப்படுகிறார். தன் இலக்கிய பங்களிப்புகளுக்காக நோபல் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவருடைய One Hundred Years of Solitude நாவலை சுகுமாரன் தமிழில் “தனிமையின் நூறாண்டுகள்” என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.

tanimaiyin-nooru-aandukaல்
ஏழு தலைமுறைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் நூறு ஆண்டு கால வரலாறு,அதன் பின்னனியில் வளர்ச்சியும், தளர்ச்சியும், ஆக்கமும்,அழிவையும் கொண்ட ஒரு ஊரின் தனிமையின் வரலாறு மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான போராட்டங்கள், ஆசைகள், இவைகளின்ஊடே ஒரு கண்டத்தின் அரசியலோடு இணைத்துப் பின்னப்பட்டுள்ளது நாவல். பழமைவாதிகளுக்கு எதிரான போரில் புரட்சிப்படைத் தளபதியாக இருக்கும் கர்னல் அவுரேலியான புந்தியா எதிரிப்படையின் துப்பாக்கி முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் நாவல் ஆரம்பித்து,ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த அமரந்தா ஊர்சுலாவுக்கு குழந்தைப் பிறந்து, நாடோடி இனத்தைச் சேர்ந்த மெல்குயாதெஸின் குறிப்புகள் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவுரேலியானோ மவுரிசியோ புரிந்துக் கொண்டதோடு நாவல் முற்றுப்பெறுகிறது. இதற்கு இடையில் வாசகனின் மூச்சைத் தினறடிக்கும் வகையில் மார்க்கேஸ் கதையைச் சொல்லிச் செல்கிறார்.

tanimaiyin-nooru-aandukal

ஒருவருடைய கதை எந்த இடத்தில் வேண்டு மானாலும் தொடங்கி அது முற்றுபெறும் முன்னரே மற்றொரு கதையைச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்.வாசிப்பவரின் சிறு அலட்சியம் கூட கதையின் சங்கிலித் தொடரை விட்டு விடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.  மனிதர்களுடைய வாழ்க்கையை மிக எதார்த்தமாக சொல்லிக் கொண்டே அவர்களுடைய பிறப்பையும் இறப்பையும் அதற்கான அவர்களுடைய வேட்கைகளையும் இயல்பாக நாவலில் பதிவு செய்துள்ளார். மொழிப் பெயர்ப்பாளர்கள் கவிஞர்.சுகுமாரன், ஞாலன் சுப்பரமணியன் இருவரும் நாவலின் அமைப்பை புரிந்து கொண்டு, மிகச் சிறப்பாக அதன் அமைப்பு குலைந்து விடாமலும்,வாசிப்பதற்கான மொழியின் ஓட்டம் தடையில்லாமலும் மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள்.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம். புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.