காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கொத்தவரைக்காய் பொரியலுடம் கொஞ்சம் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 23

DSCN3009

கொத்தவரைக்காய்
கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம். வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கு முன்பே ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து சிலவகை தாவரங்கள் தெற்காசிய கண்டாத்திற்கு இடம்பெயர்ந்ததைப்போல கொத்தரையின் தாய் செடியும் இடம்பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வறிஞர்கள். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம்கண்டு பயன்படுத்தியது இந்திய, பாகிஸ்தான் பகுதிகளில்தான். குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம்தான் இப்போது கொத்தவரை சாகுபடியில் முந்நிலை வகிக்கும் பகுதியாக உள்ளது. சமையலுக்காக பயன்படுத்துவதைக் காட்டிலும் கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார் பிசின் உணவுத்தயா¡¢ப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும் எண்ணெய் சுத்திரிப்பு ஆலைகளிலும் பயன்படுகிறது. அதனாலேயே இன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பணப்பயிர்களில் முக்கியமானதாக கொத்தவரங்காய் இருக்கிறது. ஆனாலும் சிறிதளவு கசப்பு சுவையுடைய இந்த சிறுகாயின் பொரியலையும் காரக்குழம்பையும் சுவைக்காதவர்கள் இருக்க முடியாது.

கொத்தவரங்காயை தேர்ந்தெடுப்பது எப்படி?
முற்றியிருக்காத, நார்கள் வராத வளர்ந்த காயே சமைப்பதற்கு ஏற்றது. கொத்தவரங்காய் அடர் பச்சை நிறத்தில் இருந்தால் அது இளம்காய், சமைப்பதற்கு ஏற்றது. பச்சைநிறத்தில் இருக்கும் காய்களையும் சமைக்கலாம். நன்கு வெளிர்ந்த காய்கள் முற்றலாக இருக்கும். இவற்றை சமைப்பது கடினம். நார்களும் அதிகமாக இருக்கும்.

கொத்தவரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
கொத்தவரை(100கிராம்)யில் 75% நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம்,கால்சியம் போன்ற சத்துக்களும் சிறிதளவில் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்க விரும்புகிறவர்களுக்கு இந்தக் காயை முதன்மையாக பரிந்துரை செய்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

கொத்தவரையில் ஒரு ரெசிபி…

கொத்தவரங்காய் பொரியல்
தேவையானவை:
கொத்தவரங்காய் – கால் கிலோ
புளி – கொட்டையளவு
மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
புளியை தண்ணீரில் கரைத்து கால் தம்ளர் அளவில் வைக்கவும். கொத்தவரங்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி, குக்கரில் 2 விசில் வரை வேக விடவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து காயை வதக்கவும். காய் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துப் பிரட்டி, கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்க்கவும். காய் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s