தேவையில்லாத அல்லது பயன்படாத மரக்கட்டைகள் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும். இந்த மரக்கட்டைகள் வீட்டுக்குத் தேவையான பொருட்களாக மாற்றுவதன் மூலம் மறுபடியும் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இந்த மரக்கட்டை கீ ஹோல்டர். நீங்கள் வாங்க வேண்டியது கொக்கிகள் மட்டுமே. ஒரு திருகு கொக்கியின் விலை 4 ரூபாய்தான். பயன்படுத்தி மீதமிருக்கும் பெயிண்டை கட்டையில் பூசலாம். அல்லது சிறிய பெயிண்ட் டப்பி ரூ. 25க்குள் கிடைக்கும். அடுத்து மரக்கடையில் உள்ள சொரசொரப்பை நீக்க உப்புக் காகிதம் வேண்டும்.
எப்படி செய்வது?
எந்த நீளத்துக்குத் தேவையோ அதற்கேற்ற மரக்கட்டையைத் தேர்ந்தெடுத்து உப்புக் காகிதம் வைத்து உரசுங்கள். கட்டையில் சொரசொரப்பு நீங்கியவுடன் ஒரு துணியால் கட்டையை துடையுங்கள். பிறகு எந்த இடைவெளியில் கொக்கிகள் பதிக்கப்பட வேண்டும் என்று பென்சிலால் குறியுங்கள். அதேபோல சுவற்றில் பொருத்தும்போது ஆணி அடிக்க எந்த இடத்தில் மரக்கட்டையில் இடம் விடவேண்டும் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
பென்சிலால் குறித்த இடங்களில் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தும் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டைகள் போடவும். அந்த ஓட்டையில் திருகு கொக்கிகளை திருகியால் திருகுங்கள். நன்றாக பொருந்தும்படி திருகுங்கள். கொக்கிகள் பொருத்திவிட்டு இதற்கு பெயிண்ட் பூசுங்கள். வண்ணம் உலர இடைவெளி விடுங்கள்.
எந்த இடத்தில் கீ ஹோல்டர் சுவற்றில் பொருத்த வேண்டும் அங்கே குறித்துக் கொண்டு, ட்ரில் செய்து ஓட்டைப் போடுங்கள். தயாரித்து வைத்திருக்கும் கீ ஹோல்டரை சுவற்றில் திருகு ஆணிகளால் பொருத்துங்கள். இப்போது தயாராகி விட்டது கீ ஹோல்டர்.
சாவிகளை மட்டுமல்ல, உங்களுடைய கைப்பை, வீட்டில் உள்ளவர்கள் டேக் போன்றவற்றையும் இதில் தொங்கவிடலாம்!
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்