சினிமா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் – முதல் பார்வை

 

ROMEO JULIET231542

காதலையும் காதலர்களையும் அடையாளப்படுத்த ரோமியோ ஜூலியட்  என்ற பெயரை காலம் காலமாக உபயோகப்படுத்தி வருகிறோம். அப்படிப்பட்ட கவித்துவமான ரோமியோ ஜூலியட்   என்ற தலைப்பை எந்த படத்துக்கும் சூட்டாமல் விட்டுவைத்தது  ஆச்சர்யம் தான். இப்படி ஒரு அருமையான காதல் தலைப்பை எஸ்.நந்தகோபால் வழங்க மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு சூட்டி அந்த பெருமையை பெற்றுருக்கிறார். ஆர்யா நடித்த கலாபக் காதலன், ஜீவன் நடித்த மச்சக்காரன், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் 3ஆம் விதி போன்ற படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் ரோமியோ ஜூலியட்  படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார். கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
ROMEO JULIET231151

ஒளிப்பதிவு    –     எஸ்.சௌந்தர் ராஜன்
இசை   –   இமான் , கலை   –  மிலன் ,  சண்டைப்பயிற்சி   –   திலீப் சுப்பராயன்
எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயகியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
ROMEO JULIET231273

படம் பற்றி இயக்குனர் லஷ்மன்…
’’ஃபேண்டஸியான  காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பது திரைக்கதை.
இந்த 2014 – ல் 1947 களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவும், இதே 2014 – ல் 2025 –  ல் தான் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டு. என்று ல்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயின்  இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட சுவாரஸ்யமான காதலை ஜாலியாக சொல்வதே இந்தப் படம். ஒரு வருடத்திற்கு 300 ல் இருந்து 200  படங்களாவது காதலை மையப்படுத்தியதாக இருக்கிறது.இந்த ரோமியோ ஜூலியட்  என்ற தலைப்பை எப்படி விட்டு வைத்தார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஒருவேளை இந்த தலைப்பு இந்த படத்திற்காகவே காத்திருந்ததோ’’ என்கின்றனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s