காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட்

காய்கறிகளின் வரலாறு – 22

DSCN2716

பூசணிக்காய்
திருஷ்டிக்காக உடைக்கப்படும் காயாக மாறிப்போன பூசணிக்காயின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா பகுதி. பழந்தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் பூசணிக்காய் இதுவே.கோயில்களில் உயிர்பலி கொடுக்கும் வழக்கம் வைதீக மதங்களின் வருகைக்குப் பிறகு மாற்றத்துக்குட்பட்டபோது அங்கோ பயன்பட்டது அதுவரை சமையலுக்காக பயன்பட்ட பூசணிக்காய். கோயில்களில் உயிர்பலி கொடுப்பதற்கு மாற்றாக பூசணிக்காய், தேங்காயை உடைக்க ஆரம்பித்தனர். குளிர்காலத்தில் மட்டும் விளைந்துகொண்டிருந்த இந்தக் காய், தற்போது எல்லா காலங்களிலும் விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலும் உடைப்பதற்காக விளைவிக்கப்பட்டாலும் இதில் உள்ள சத்துக்களை குறைத்து மதிப்பிட முடியாது. சமையலில் சேர்க்கப்படும் மற்ற காய்கறிகளைப் போலவே இது சத்து நிறைந்த காய். சாம்பல் பூசணி, வெண் பூசணி என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

சமைப்பதற்கு உகந்த பூசணிக்காய் எது?
மேல்புற தோலில் சாம்பலை பூசியது போன்று இருக்கும் காயே சமைப்பதற்கு உகந்த காய். மேலும் இதன் தோலில் நகத்தால் லேசாக அழுத்திப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும். கடினமாக இருந்தால் முற்றிய காயாக இருக்கலாம். இதை சமைப்பது கடினம்.

பூசணிக்காயில் உள்ள சத்துக்கள்
100கிராம் பூசணிக்காயில் கார்போஹைட்ரேட் 3 கி,நார்ச்சத்து 2.9கி, கொழுப்பு 0.2கி, புரதம் 0.4கி அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி 16%, வைட்டமின் பி காம்பளக்ஸ் உள்ளது. இவற்றைத் தவிர, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம்,மக்னீசியம் போன்ற தனிம சத்துக்களும் அடங்கியுள்ளன.

பூசணியில் ஒரு ரெசிபி…

பூசணி சாலட்
தேவையானவை:
துருவிய பூசணி – ஒன்றரை கிண்ணம்
அவல் – ஒரு கிண்ணம்
தயிர் – ஒரு கிண்ணம்
தாளிக்க
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
உளுந்து – கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிது
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூசணித் துருவலில் இருக்கும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் லேசாகப் பிழிந்துவிட்டு, துருவலை மட்டும் தனியாக வேறொரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அவலை லேசாக தண்ணீரில் அலசி பிழிந்து, பூசணி தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு துருவிய பூசணி, ஊறிய அவல், தயிர், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைத்து கொண்டு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளித்து, இந்தக் கலவையில் கொட்டி கலந்து விடவும். இறுதியாக நறுக்கி வைத்த கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறலாம்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s