உடல் மேம்பட
வியர்க்குரு, ஒவ்வாமை, வியர்வை படிவதால் ஏற்படும் பூஞ்சை காளான் தொற்று என தோல் தொடர்பான பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்துவிடும். இதற்கான தீர்வுகளை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல்.
வெயிலில் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அதை சமன் செய்ய, தண்ணீர் சத்து மிக்க தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை, வெள்ளரி போன்ற பழங்களை உண்ண வேண்டும். கோடையில் நம்மை வாட்டியெடுக்கும் முதன்மையான பிரச்னை வியர்க்குரு. தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை குளித்தால் வியர்க்குரு பிரச்னையிலிருந்து பாதுகாக்கலாம். வியர்க்குரு, ஒவ்வாமை வந்தால் கேலமைன் லோஷன் தடவினால் சரியாகும். பூஞ்சைக் காளான் பிரச்னைக்கு குலோட்ரிமசோல் க்ரீம் பயன்படுத்த வேண்டும்.
வெயிலிருந்து பாதுகாக்க பலர் சன் ஸ்கீரின் லோஷன் பயன்படுத்துகிறார்கள். சன் ஸ்கீரின் லோஷனை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம். வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் பழமாக இருப்பது தர்பூசணி. தர்பூசணியின் சிவப்பான பகுதியை உண்பதை மட்டுமே வழக்கமாக நாம் வைத்திருக்கும். சிவப்பு பகுதியைவிட, தர்பூசணியின் தோலை ஒட்டியிருக்கும் நாம் தூக்கியெறியும் வெள்ளையான பகுதியில்தான் 92 சதவிகித நீர்ச்சத்து இருக்கிறது. தோலை சீவிவிட்டு வெள்ளைப் பகுதியோடு சேர்த்து உண்டால்தான் முழுமையான சத்து கிடைக்கும் என்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல்.
(தொடரும்)
டாக்டர் ரத்னவேல்
தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர்
அவினாஷ் தோல் மற்றும் அழகுக்கலை மையம்,
366, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை -21
தொலைபேசி 93823 065426, 92831 38178