இந்த வாரம் (நாளை 11-04-2014) நான் சிகப்பு மனிதன், ஆண்டவா காப்பாத்து, காந்தர்வன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
காத்தவராயன் படத்தின் இயக்கநர் சலங்கை துரை இயக்கத்தில் வெளிவரும் அடுத்த படம் காந்தர்வன். படத்தில் கதிர், ஹனிரோஸ், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எதிர்பாராத கிளைமேக்ஸ் கொண்ட காதல் கதை என்கிற படத்தின் இயக்குநர் துரை.
பாண்டியநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு, தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விஷால் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். இயக்குநர் திரு, விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் படங்களை இயக்கியவர். லட்சுமி மேனன், இனியா, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், ஜகன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். இசை ஜி.வி.பிரகாஷ்.
ஆண்டவா காப்பாத்து படத்தை நகைச்சுவை பின்னணியில் உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார் படத்தின் இயக்குநர் லெபின். படத்தில் ஹாரிஸ், அலீஷா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை ஜான் பீட்டர்.