புத்தக அறிமுகம்
நரேந்திர மோடி ஆசி பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்
காரவான் இதழில் “The Believer” என்கிற கவர் ஸ்டோரியாக வந்த திரு. அசீமானந்தா என்னும் இந்துத்துவ பயங்கரவாத சாமியாரின் விரிவான, விவரமான ஒப்புதல் வாக்குமூலம். இதில் அவர் விவரிப்பது அவருடைய வாழ்க்கையை மட்டுமல்ல. ஆர். எஸ். எஸ், வி. எச். பி போன்ற நேரடி அரசியலில் ஈடுபடாத அமைப்புகளும், பாஜகவின் தலைமையும், மோடி, அத்வானி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் எப்படி ஹிந்துத்தவ கோட்பாட்டினை இந்தியா முழுக்க பரப்ப முயல்கின்றனர், இதன் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது, எப்படி வேலை செய்கிறார்கள், பாஜக மாநில அரசுகள் (குறிப்பாக குஜராத் அரசு) இந்த ஹிந்துத்துவ தீவிரத்தன்மையை எப்படி அரசாங்க ரீதியாக முன்னெடுக்கின்றன என்பது பற்றியும் இன்னும் சில அதிர்ச்சியூட்டும் பல தகவல்களோடு சேர்த்து சொல்லியிருக்கிறார்கள் இந்த பிரதியில்.
சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டு தொடர்ப்பான ஒரு பேச்சில், இந்துக்களும் இதில் இறந்து போவார்களே என்று கேட்டதற்கு, ஒரு பேச்சாளர் சொல்வது ”புழுக்களை கொல்லும்போது கொஞ்சம் சாதமும் வீணாய் தான் போகும்”. இது வெறும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறியாட்டம் மட்டுமல்ல, சராசரி இந்தியர்கள் (அவர்களுக்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ வேறுபாடுகள் கிடையாது) மீது தொடுக்கப்படும் வன்முறை. இதை முறியடிக்கும் முயற்சியோடு ஒத்த கருத்துடையவர்கள் சேர்ந்து இந்த பிரதியை தமிழ் படுத்தியிருக்கிறார்கள். சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன் இதை ஒருங்கிணைத்திருக்கிறார். மொழிபெயர்த்திருக்கிறார் பத்திரிகையாளர் ஞாநி.
பக்கங்கள்: 48
உரிமை: Caravan Magazine, Delhi Press
அன்பளிப்பு: ரூ. 10 பிரதிக்கு