சீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்

சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

சுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்…

DSC_0461 (2)

  • பயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.
  •  நீண்ட நாள் டூர் என்றால்… நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம்.
  •  பக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின் டூப்ளிகேட்டையும் குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.
  • வீட்டுக் கதவைப் பூட்டும் முன் ‘காஸ் சிலிண்டரை’ யும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆஃப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா என்பதை சரி பாருங்கள்.
  • வெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது ஒருவகையான பாதுகாப்பு.
  • ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள், உங்கள் டாக்டரை சந்தித்து, உங்கள் பயண விவரங்களைச் சொல்லி, அவரின் ஆலோசனையையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லா மருந்து களும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்து களையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
  • எண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப் பவுடர், ஷாம்பூ, குளியல் சோப், கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, சிறிய மக், செல் சார்ஜர் ஆகியவற்றை மறக்க வேண்டாம். முதல் உதவிக்கான மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணக் களிம்புகள், பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவையும் உங்கள் பயண தயாரிப்பில் கட்டாயம் இருக்க வேண்டும்.
Advertisements

1 thought on “சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s