வெயில் காலங்களில் நாம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை வியர்வை. சிலருக்கு வியர்வை வெளியேறும்போது கடுமையான துர்நாற்றமும் வெளிவரும். அசைவ உணவுகள் சாப்பிடுவதுதான் வியர்வை நாற்றமடிக்க காரணம் என்ற தவறான கருத்து உண்டு. இது உண்மையல்ல என்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல்.
’’வியர்வை நாற்றத்திற்கு உணவும் ஒரு காரணம்தான். ஆனால் அசைவ உணவுகள் உண்பவர்களுக்கு மட்டும்தான் வியர்வை நாற்றமடிக்கும் என்பது தவறான கருத்து. வியர்வை நாற்றத்திற்கு உடலில் இருக்கும் கிருமிகளும் ஒரு காரணம்.
வியர்வை நாற்றத்தை மிகப்பெரிய பிரச்னையல்ல. எளிதில் இதை சரிசெய்யலாம். வியர்வை நாற்றமடிக்கும் பிரச்னை உள்ளவர்கள் உணவு வகைகளில் பீட்ரூட், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை சோப்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்த பிறகு, அக்குள் மற்றும் மறைவிடங்களில் குலோட்ரிமசோல் பவுடர் போடுங்கள்.
உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது ஒன்றே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைத் தரும்.’’
(தொடரும்)
டாக்டர் ரத்னவேல்
தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர்
அவினாஷ் தோல் மற்றும் அழகுக்கலை மையம்,
366, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை -21
தொலைபேசி 93823 065426, 92831 38178
சிறந்த உளநல வழிகாட்டல்