ரஜினி நடித்த நான் அடிமை இல்லை, அடுத்த வாரிசு மற்றும் ஹிந்தி கங்குவா போன்ற படங்களை தயாரித்த பிரபல நடிகர் துவாரகேஷின் துவாரகேஷ் சித்ரா பட நிறுவனம் தயாரிக்கும் படம் ஹலோ பாஸ். கன்னடத்தில் விஷ்ணுவர்தனா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனா படம் இது. பிரியா மணி இரட்டை வேடத்தில் நடித்த சாருலதா படத்திற்கு முன்பு இயக்குனர் பொன்குமரன் இயக்கிய முதல் படம் இது.
சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக பிரியா மணி, பாவனா நடிக்கிறார்கள். மற்றும் சோனுசூத்,ஆர்த்தி மற்றும் துவாரகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். வசூலில் சூப்பர் ஹிட் மற்றும் பல விருதுகளையும்,சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்று தந்த படம் இது.
ஒளிப்பதிவு – ராஜரத்னம்
இசை – ஹரி கிருஷ்ணா
வசனம் – சீனிவாசமூர்த்தி
இணை தயாரிப்பு – யோகேஷ்
தயாரிப்பு – துவாரகேஷ்
கதை, திரைக்கதை, இயக்கம் – பொன்குமரன்
“சாதாரண ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மிகப்பெரிய தாதா ஒருவனிடம் மோதும் அதிரடி ஆக்ஷன் படம் இது. இந்த படம் வெளியான போது படத்தை பார்த்த விஜய் தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது அந்த அளவிற்கு கமர்ஷியல் படம் இது’’ என்கிறார் பொன்குமரன்.