சத்யபாமா பல்கலைகழகத்தில் பெண்களுக்கென்றே பிரத்யெகமாக நடைபெற்ற “ஃபெம் ஃபெஸ்ட் ’14” என்னும் கல்சுரலஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பளிச்சென்ற நீல நிற ஷர்ட் மற்றும் வெள்ளை ஃபேண்ட் அணிந்திருந்த அவர், இரண்டே வரிகளில் தனது உரையை முடித்துகொண்டாலும், அங்கு கூடியிருந்த அனைத்து இளம்பெண்களின் மனதையும் வசீகரிக்க தவரவில்லை.
’’என்னை இங்கு சிறப்பு விருந்தினராக அழைத்து “ஐகான் அவார்ட்” அளித்த ஜேப்பியார் அவர்களுக்கு நன்றி. தமிழ் நாட்டில் சிறந்த பல்கலைகழகங்கலுள் ஒன்றான சத்தியபாமாவில் பயிலும் பெண்களுக்கு சிறந்த சிந்தனைகளும், அறிவும் நிரம்பியிருக்கும் (என்று கூறி முடிக்கும் முன்னரே ஆரவாரம் அரங்கத்தை அதிரவைத்தது!!) கல்லூரி பருவம் வாழ்க்கையில் பசுமையான ஓர் அனுபவம். அதை முடிந்தவரை அனுபவித்து,அதே சமயம் பெட்றோர்களுக்கும் நல்ல பெயர் கொண்டு சேர்க்க முயற்ச்சியுங்கள்” என்று உரையை அழகாக நிறைவுசெய்தார்.
எனக்கு மிகவும் பிடித்த நடிகை, ஸ்ரீதேவி.
இப்போது ஏனோ மிகவும் இளைத்துப் போய், கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது! 16 வயதினிலே ஸ்ரீதேவியை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்!