இலக்கியம், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

”ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிப்பவர்கள் பெண்களே!”

அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், என்றைக்கும் ஒரு நாட்டில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் தீர்மானிப்பவர்களாக பெண்களே இருக்கிறார்கள் என்று கவிஞர் அ.வெண்ணிலா பேசும்போது குறிப்பிட்டார்.
இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். பங்கேற்ற அனைவரையும் ரா.மகேஷ்வரி வரவேற்றார். தலைமையாசிரியர் இரா.தேன்மொழி, கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதுச்சேரி அகில இந்திய வானொலி முதுநிலை அறிவிப்பாளர் கவிஞர் உமா மோகன் எழுதிய ‘டார்வின் படிக்காத குருவி’ கவிதை நூலை கவிஞர் அ.வெண்ணிலா வெளியிட,  விழுப்புரம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர்  அர.நர்மதாலட்சுமி பெற்றுக் கொண்டார்.

100_4554
கவிஞர் அ.வெண்ணிலா கவிதை நூலை வெளியிட, மருத்துவர் அர.நர்மதாலட்சுமி பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். ( நடுவில்) நூலாசிரியர் கவிஞர் உமா மோகன், தொழிலதிபர் இரா.சிவக்குமார், கவிஞர் மு.முருகேஷ்

 

கவிதை நூலை வெளியிட்ட கவிஞர் அ.வெண்ணிலா பேசும்போது,  ”வழக்கமான குடும்பப் பணிகளை கடந்து, பெண்கள் தங்களின் விருப்பத் துறைகளுக்கு வருவதே சமூகத்தில் அரிதான விஷயம். அப்படி வரும் பெண்கள் தங்களின் துறைகளில் உயர்ந்த இடத்தை அடைவது என்பது மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால் போராட்டங்களைக் கடந்து பெண்கள் தங்கள் இலக்கை அடைந்து வருகிறார்கள். பெண்கள் உயர் பதவியில் இருக்கும்போது அவர்களின் செயல் ஆற்றல் வியப்புக்குரியாக இருக்கும். தங்களின் பணியில் அர்ப்பணிப்பும், விடாப்பிடியான போராட்ட குணமும், துணிச்சலாக முடிவெடுக்கும் திறனும் இன்று மிக அதிகமாக வளர்ந்து வருகிறது.பெண்கள் அதிகாரிகளாக பணி செய்யும் இடங்களில் நிறைய மாற்றங்கள் வருவதை கண்ணெதிரில் நாம் பார்க்கும் காலம் வந்துவிட்டது. மாற்றங்களை செயல்படுத்துவதில் பெண்கள் துணிச்சலாக முடிவெடுப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தலிலும் பெண்களை மையமிட்டே பிரச்சாரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெண்களே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். எளிய காரணங்களுக்காக பெரும் சக்தியை வீணாக்காமல் மாற்றங்களை நோக்கி திட்டமிடும்போது, அது சமூக மாற்றமாக மாறும். பெண்கள் நினைத்தால், தெளிவாக இருந்தால் அந்த மாற்றத்திற்கான வழிகாட்டிகளாக இருக்க முடியும்.அத்தகைய சமூக மாற்றத்தை, பெண் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் கவிதைகளை கவிஞர் உமா மோகன் எளிய மொழியில் நுட்பமாக எழுதியுள்ளார் என்று பேசினார்.
நூலைப் பெற்றுக் கொண்ட மருத்துவர் அர.நர்மதாலட்சுமி, பெண்கள் குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பராமரிப்பு, அலுவலகப் பணி இவற்றையும் தாண்டி இன்றைக்கு இலக்கியத் தளத்திலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். கவிஞர் உமா மோகன் அத்தகைய படைப்பாளிகளில் ஒருவர் என்பது மகிழ்வைத் தருகிறது என்றார்.
நூலாசிரியர் கவிஞர் உமா மோகன் ஏற்புரையில், ”என் வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வழியே நான் பெற்ற அனுபவமும், நான் விரும்பும் சமுதாய மாற்றத்தையும் முன்மொழிபவையே எனது கவிதைகள்” என்றார்.  நிறைவாக, சு.சங்கீதா நன்றி கூறினார்.
.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.