கீரைகள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

மணத்தக்காளி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!

வீட்டுத் தோட்டம்

DSCN2677

மணத்தக்காளி கீரை மிகுந்த மருத்துவ குணம் மிக்கதாக பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்படுகிறது. மூலிகைக் கீரையான இதை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். ஒரு முறை வைத்த செடி, பல மாதங்களுக்கு பலன் தரும். மூன்று தொட்டிகளில் வளர்த்தால் வாரம் ஒரு முறை மூன்று பேருக்கான கீரைகளை பறிக்கலாம்.
மணத்தக்காளி செடிகள் எங்கே கிடைக்கும்?
மணத்தக்காளி செடிகளை, நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் விதைகள் மூலம் வளர்க்கலாம். அல்லது நாம் கடைகளில் வாங்கும் கீரைகளில் இருக்கும் பழங்களை சேகரித்து,அவற்றை மண்ணில் தூவியும் செடிகளை வளர்க்கலாம். இந்த கீரையின் விதைகள் முளைக்கும் திறன் மிக்கவை என்பதால், விதைப்பது சுமாரான ரகமாக இருந்தாலே விதைகள் முளைத்துக் கொள்ளும். இப்படி விதைத்து வளர்ந்த ஒரு மாதமான செடிகளை பறித்து வேறு தொட்டிகளில் மாற்றி வைக்கலாம். ஒவ்வொரு தொட்டியிலும் இரண்டு, அல்லது மூன்று செடிகள் சேர்த்து நட வேண்டும்.
தொட்டியில் நடவு செய்யும் முறை
எந்த அளவுக்கு தொட்டியின் அளவு பெரிதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அதில் நடும் செடிகளின் வேர் பரவி வளரும். இதனால் செடிகள் நீண்ட நாட்களுக்கு செழிப்பாக இருக்கும். கீரை வகைகளுக்கு பெரிய தொட்டிகளை பயன்படுத்தினால் இலைகள் செழித்து வளரும், பல மாதங்களுக்கு கீரைகளை பறித்து பலன் பெறலாம்.
தொட்டியை தேர்வு செய்து கொள்ளுங்கள். தொட்டியின் கொள்ளளவுக்கு ஏற்றபடி சரிபாதி மண்ணும் இயற்கை உரத்தையும் கொட்டி கலந்து கொள்ள வேண்டும். தொட்டியில் அதிகப்படியான நீர் வெளியேற துளைகள் போடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். துளைகள் மூடியிருந்தால் ஒரு ஆணியை வைத்து துளைகளின் அடைப்பை எடுத்து விடுங்கள். துளைகள் மிகவும் பெரிதாக இருந்தால் தொட்டியின் அடியின் சிறுகற்களைப் போட்டுவிட்டு, அதற்கு மேல் கலந்து வைத்திருக்கும் மண்ணைப் போடுங்கள். தொட்டியை முழுவதுமாக நிரப்பிவிட்டு, தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் வடிந்து எல்லா மண்ணையும் நனைத்த உடன், செடிகளை நடலாம்.
எந்த நேரத்தில் செடிகளை நட வேண்டும்?
வெயில் நாட்களில் மாலை நேரங்களில் செடிகளை நடுவதே சிறந்தது. காலையில் நட்டால் புதிய மண்ணில் வேர்விடாத செடிகள் கொளுத்தும் வெயிலுக்கு இறையாகிவிடும். அதனால் மாலையில் செடிகளை நடுங்கள்.
DSCN2678

எப்போது கீரைகளைப் பறிக்கலாம்?
தொட்களில் நட்ட மணத்தக்காளி செடிகள் அடுத்த 30 நாட்களில் நன்றாக செழித்து கிளைவிட்டு வளர்ந்திருக்கும். ஒரளவுக்கு கிளைகள் தோன்ற ஆரம்பித்தவுடன், கீரைகளை பறித்துவிடுங்கள். கீரைகளை பறிக்கும்போது நீண்ட கிளைகளை முறிக்காமல், தனித்தனி கொத்தாக வளர்ந்திருக்கும் கீரைகளை அப்படியே கிள்ளிக்கொள்ளலாம். ஒரே வாரத்தில் கீரைகளில் புதிய கிளைகள் அல்லது கொத்துகள் முளைக்க ஆரம்பித்துவிடும். இப்படி பல முறை பறித்து பயன் பெறலாம்.
செடிகள் நன்றாக வளர்ந்ததும் காய்கள் தோன்ற ஆரம்பிக்கும் இந்தக் காய்களை சேகரித்து, மணத்தக்காளி வற்றல் செய்யலாம். கனிகளை பறித்து, அதிலிருந்து விதைகளை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

Advertisements

1 thought on “மணத்தக்காளி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s