இந்த வாரம் மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், கூட்டம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.
ஹிட் ஹீரோவாக கோலிவுட்டில் வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் படம் மான் கராத்தே. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தின் நாயகியாக ஹன்சிகா. படத்தை இயக்கியிருக்கிறார் கே. திருக்குமரன்.
சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவரும் ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் படத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அர்ஷிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கூட்டம் படத்தில் நவீன்சந்திரா, கிஷோர், நாசர், சாய்குமார், பியா பாஜ்பாய், மகாதேவன், அபிமன்யூசிங், பிரகதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்கம் எம்.ஆர்.ஜீவன் .