காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

இன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்

காய்கறிகளின் வரலாறு –  19

கோவைக்காய்

P1020340

வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த கொடி வகை கோவைக்காய். ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகள் வரை இந்தக் கொடி வகை பரவியுள்ளது. கோவைப்பழத்தை விரும்பி உண்ணும் பறவை, பல்லி, எலி போன்ற உயிரினங்களால் இது கட்டுப்படுத்த முடியாத கொடி வகையாக இந்தப் பகுதிகளில் பரவிருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பழங்கால மருத்துவ முறைகளில் கோவைக்காய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  புதரில், காட்டுப் பகுதிகளில் பரவியிருக்கும் இந்தக் கொடியின் காய்களிலிருந்து மேம்படுத்தப்பட்டது தற்போது சமையலுக்கு நாம் பயன்படுத்தும் கோவைக்காய்.

சமைப்பதற்கு உரிய கோவைக்காயை தேர்ந்தெடுப்பது எப்படி?
இளம்காய்களே சுவைக்க ஏற்றவை. பச்சை நிறத்தில் இருப்பவையே இளம்காய்கள். முற்றிய காய்கள் கரும்பச்சை நிறத்தில் ஆங்காங்கே பழுப்பதற்கான அறிகுறிகளாக சிவப்பு திட்டுக்கள் தோன்ற ஆரம்பித்திருக்கும். இப்படிப்பட்ட காய்கள் தடித்து, சமைப்பதற்கு கடினமானவையாக இருக்கும். சில பகுதிகளில் நன்கு சிவந்த நாட்டு கோவைப்பழங்களை உண்பர். நாட்டுக் கோவைக்காய் கசப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் அதை சமையலில் பயன்படுத்துவதில்லை. தோட்டத்தில் விளையும் கோவைக்காயில் கசப்பிருக்காது.

கோவைக்காயில் உள்ள சத்துக்கள்
கோவைக்காய் (100கிராம்)ல் நீர்ச்சத்து 93.5கி, கார்போஹைட்ரேட் 3.1கி, புரதம் 1.2கி, கொழுப்பு 0.1கி போன்ற அத்தியாவசிய சத்துக்களும் வைட்டமின் ஏவும் கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற தனிம சத்துக்களும் சிறிதளவில் உள்ளன.

கோவைக்காயில் ஒரு சுவையான ரெசிபி…

கோவைக்காய் கார பொடிமாஸ்
தேவையானவை:
கோவைக்காய் – அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் – அரை கிண்ணம்
கீறிய பச்சைமிளகாய் – 1
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி விழுது – தலா ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஈர்க்கு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோவைக்காயை வெட்டி ஆவியில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கி இஞ்சி விழுது, பொடிகளைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும். இதில் வேகவைத்த கோவைக்காய், உப்பு சேர்த்துக் கிளறி, ஒன்றாக சேர்ந்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கோவைக்காய் குறித்த காமாட்சி மகாலிங்கம் தந்த  அனுபவக் குறிப்புகள்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s