குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர சிற்றுண்டி – கோதுமை மாவு இடுபோளி

மாலை நேர சிற்றுண்டி

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

சாதாரணமாக போளி என்றால் மைதா மாவுக் கலவையில் பூரணம் நிரப்பி செய்வதுதான் வழக்கம். ஆனால் கோதுமை மாவுக் கலவையில் சர்க்கரை, பருப்பு கலந்த பூரணம் நிரப்பி போளியைக் குழவியால் இட்டுச் செய்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ரொம்ப நாட்களாகவே நினைத்திருந்தேன். ரவை கலந்துகூட தயாரிக்கலாம். இலையில் போளியைத் தட்டாமல், அப்பளாம் இடுவது போல அப்பளாக் குழவியினால் மேல்மாவு தொட்டு இடும் வகை இந்தப் போளி. கோதுமை மாவில் தயாரிப்பதால் உடம்பிற்கு நல்லது. பாருங்கள் இந்த முறையையும். பூரணம் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் வேண்டும் போதெல்லாம் தயாரித்துக் கொள்ளலாம். போளிகளைத் தயாரிப்பதற்கு இடும்போது ஒற்றி இட நல்ல நைஸான அரிசி மாவு உபயோகப் படுத்தினால் போளிகள் அழகாக இட வரும். முன்னுரை போதும். காரியம் செய்து போளியைத் தயாரிப்போம்.

வேண்டியவைகள்:
கடலைப் பருப்பு – அரை கப்
துவரம் பருப்பு – அரை கப்
சர்க்கரை – 2 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
ரிஃபைண்ட் ஆயில் – அரை கப்
நெய் – தேவையான அளவு
நன்றாக சலித்த கோதுமை மாவு – 3 கப்
நைஸான அரிசி மாவு – வேண்டிய அளவு

செய்முறை:
பருப்புகளைக் களைந்து துளி மஞ்சள்பொடி சேர்த்துத் திட்டமான தண்ணீரில் ப்ரஷர் குக்கரில் ஒரு விஸில் விட்டு வேகவைத்து எடுக்கவும். ஸப்ரேட்டரில் வேகவைத்தாலே போதும். தண்ணீர் அதிகமிருந்தால் வடிக்கட்டவும். பருப்பு நன்றாக வேக வேண்டும் என்ற அவசியமில்லை.  கோதுமை மாவுடன் உப்பு, துளி மஞ்சள் பொடி சேர்த்து, திட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். ரொட்டி மாவு மாதிரிதான். மூன்று டேபிள் ஸ்பூன் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்து மாவை நன்றாக இழுத்துப் பிசைந்து ஊற விடவும். காற்றுப் புகாமல் மாவை மூடிவைக்கவும்.
ஆறிய பருப்புடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைக்கவும். துளி சர்க்கரை சேர்த்தரைத்தால் சுலபமாக இருக்கும். பருப்புக் கலவை அரைந்ததும், சர்க்கரையையும் சேர்த்ர்க்ய் அரைக்கவும். பருப்புடன் சர்க்கரை சேர்த்து அரைக்கும் போது கலவை நெகிழ்வாக இருக்கும். ஒரு நான் ஸ்டிக் வாணலியிலோ, அல்லது அடி கனமான பாத்திரத்திலோ கலவையைக்கொட்டி, நிதான தீயில் வைத்துக் கிளறவும். தீயை ஸிம்மில் வைத்து 2, 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அடி பிடிக்காமல் கிளறவும். பூரணம் கையில் பிசுக்கென்று ஒட்டாத மாதிரி பதம் வரும் வரைக் கிளறி இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும். பிசைந்த மாவைத் திரட்டி உருட்டி, சமமான உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். அதே அளவில் பூரணத்தையும் பிரித்து உருட்டிக் கொள்ளவும். அரிசி மாவையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.

untitled
சப்பாத்தி இடும் மனையிலோ, அல்லது கல்லிலோ அதில் அரிசிமாவைத் தொட்டு ஒரு மாவு உருண்டையைச் சின்ன வட்டமாகக் குழவியின் உதவியினால் இட்டுக் கொள்ளவும். துளி எண்ணெயை வட்டத்தின் மீது தடவி, பூரணத்தைச் சற்று தட்டையான வடிவத்தில் வட்டத்தின் நடுவே வைக்கவும். மாவின் விளிம்புகளால் பூரணத்தைச் சுற்றி இழுத்து மூடவும்.

untitled 2

திரும்பவும் அரிசி மாவில் பிரட்டி அப்பளங்கள் வடிவில் போளிகளை இடவும்.

untitled 3

ரொட்டி செய்யும் நான் ஸ்டிக் தோசைக் கல்லைக் காயவைத்து அவ்வப்போது செய்யும் போளிகளைப் போட்டு இருபுறமும் நெய் தடவி திருப்பிப் போட்டு பதமாகச் செய்து எடுக்கவும். எடுக்கும் போதே மடித்தெடுக்கவும்.

untitled 4
கையில் ஒட்டாத பதமாகச் செய்த பூரணத்தை நல்ல கனமான பாலிதீன் பைகளில் சேமித்து காற்றுப்புகாமல் மூடி ஃப்ரிட்ஜில் வைத்து அதிக நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். மாவு அவ்வப்போது பிசைந்து கொண்டால் போதும். மாவையும் சற்று நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்துச் செய்தால் மிகவும் சரியாக இடவரும். செய்து ருசித்துப் பாருங்கள்.

“மாலை நேர சிற்றுண்டி – கோதுமை மாவு இடுபோளி” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. நம்ம வீட்டில் எப்போதுமே சப்பாத்தி மாவில்தான் போளி. வெறும் கடலைப் பருப்பு மட்டும்தான். து. பருப்பு சேர்ப்பதில்லை. சர்க்கரையும் ப்ரவுண்தான். ஒயிட் சேர்ப்பதில்லை. இப்போ கொஞ்ச நாட்களாக பனைவெல்லம் சேர்க்கிறேன்.

    மேலும் அதிகமாகச் செய்து வைக்கும் பூரண உருண்டைகளை ஃப்ரீஸரில் வைத்து விடுவேன். மகள் வரும் நாட்களில் மூணு உருண்டை வெளியில் வரும்:-)

    சப்பாத்தி மாவு தினமும் தயாரிப்பதால் ஈஸி போளிதான் எப்பவும்:-)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.