கண் பாதுகாப்பு, காசநோய், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி?

நோய்நாடி நோய்முதல் நாடி – 40

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

என் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை. வலது கண்ணால் எல்லாப்பொருட்களையும் பார்க்க முடிகிற அவரால், இடது கண்ணால் எதையும் பார்க்க முடிவதில்லை. வெறும் கருப்பாகத் தெரிகிறது என்றார்.

இந்த நிலையை ஆங்கிலத்தில் AMD (Age-related Macular degeneration) என்கிறார்கள். மாக்யூலா என்பது கண்ணின் பின்புறத்தில் விழித்திரையின் நடுவில் இருக்கும், ஒளிஉணர் திசு. நமது நேர்பார்வைக்குக் காரணம் இந்த மாக்யூலா. அறுபது வயதிற்கு மேல் இந்த மாக்யூலா சிதைய ஆரம்பிக்கிறது. இதைத்தான் AMD என்கின்றனர். இதில் பலவகை இருந்தாலும், வயதாவதன்  காரணமாக வருவது மிகவும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் கண்ணின் நடுப்பார்வை மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கிறது. இதனால் தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களான செய்தித்தாள் படிப்பது, வண்டிகள் ஓட்டுவது இவைகள் பாதிக்கப்படுகிறது. இது மிகவும் மெல்ல பரவுவதால் உடனடியாக வெளியில் தெரிவதில்லை. இரண்டு கண்களையும் இந்நோய் பாதித்தாலும் ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

 • இந்த AMD வலியில்லாதது.
 • இதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகை உலர் AMD; உலர் வகை AMD தான் அதிக அளவில் காணப்படுகிறது. மெல்ல மெல்ல கண்கள் பாதிக்கப்படுகிறது.
 • இரண்டாவது ஈரப்பசையுள்ள AMD. இந்த ஈரப்பசையுள்ள AMD அதிக அளவில் காணப்படுவதில்லை ஆனாலும் வெகு விரைவில் கண்கள் பாதிக்கப்படுகின்றன. விழித்திரைக்கும், கண்ணின் வெளிப்புறப்பூச்சிற்கும் நடுவில் புதிய இரத்தக் குழாய்கள் வளர ஆரம்பிக்கின்றன. இவை மிகவும் மெல்லியதாக இருப்பதால் இவற்றிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கிறது. இப்படி வடிந்த இரத்தம் அங்கேயே தேங்கி விடுவதால் நடுப்பார்வை பாதிக்கப்படுகிறது.
 • உலர் AMD இருக்கிறவர்களுக்கு இரண்டாம் வகை ஈரப்பசையுள்ள AMD வர வாய்ப்புள்ளது.
 • ஆனால் உலர் AMD எப்போது ஈரப்பசையுள்ள AMD யாக மாறும் என்பதும் முன்னாலேயே சொல்ல இயலாது.
 • உலர் AMD முதலில் ஒரு கண்ணை மட்டுமே பாதிக்கும். இது ஏன் ஏற்படுகிறது என்று காரணம் சொல்ல இயலாது.
 • புகை பிடித்தல், உயர் இரத்த அழுத்தம், அதிக பருமன், செறிவூட்டப்படாத கொழுப்பு எளிய மாவுசத்து கொண்ட பொருட்களை உண்ணுதல், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை இந்த AMD க்குக் காரணங்கள்.
 • முதலில் சிறிய அளவில் கண் பார்வை மங்கலாக ஆரம்பிக்கும். படிப்பதற்கு அதிக வெளிச்சம் தேவைப்படும். அருகில் வரும் வரை எதிரில் வருபவரை அடையாளம் கண்டுகொள்வது கடினமாக இருக்கும்.
 • நோய் முற்றிய நிலையில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் நடுவில் எதுவும் தெரியாது.
 • ஈரப்பசையுள்ள AMD உள்ளவர்களுக்கு பார்வையில் அலை அலையாக நீண்ட கோடுகள் தெரியும்.
 • உலர் AMD க்கு சிகிச்சை கிடையாது. ஆனால் இந்நோய் மேலும் பரவாமலும் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மூலமும், வைட்டமின் மாத்திரைகள் மூலமும் மேலும் கண்ணுக்குள் போடப்படும் ஊசிகளாலும் இந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
DSC_1016
ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

 

அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் தங்களது இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளை அடிக்கடி சோதித்துக் கொள்வதைப்போல கண்களையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கண் பார்வையில் சிறிய அளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்தக் கட்டுரையுடன் நமது கண்கள் பற்றிய மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் முடிவுக்கு வருகின்றன. வரும் வாரத்திலிருந்து காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகள் அடங்கிய ENT பற்றிப் பேசுவோம்.
ஒவ்வொருவருடமும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காசநோய்க்கு முக்கியக் காரணம் புகை பிடித்தல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். முதல் அறிகுறி என்றால் இருமல். ஆனால் எல்லாவகையான இருமல்களும் காசநோய் அறிகுறி அல்ல. காசநோயில் பலவகைகள் உண்டு. அதிகமாகக் காணப்படுவது நுரையீரலை பாதிக்கும் காச நோய்.

அறிகுறிகள்:

 • மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இடைவிடாத இருமல்.
 • மார்பு வலி: பொதுவாக இருமல் இருந்தாலே மார்பில் வலி இருக்கும். ஆனால் இந்த மார்புவலி இருமல் இல்லாதபோதும் இருக்கும்.
 • இருமலின் போது கெட்டியான கோழை அல்லது இரத்தம் கலந்த கோழை வெளி வருதல்.
 • தொடர்ந்து உடல் அயர்ச்சி, களைப்பு: காசநோயாளிகளுக்கு இந்த உடல் அயர்ச்சியும், களைப்பும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தோற்றாலும், மூச்சுவிட சிரமப்படுவதாலும் உண்டாகும்.
 • உடல் எடை வெகுவாகக் குறைவது.
 • குளிருடன் கூடிய ஜுரம்.
 • பசியின்மை
 • இரவு நேரங்களில் அளவுக்கு மீறிய வியர்வை.

காச நோயிலிருந்து எப்படி தற்காத்து கொள்ளுவது?

இது காற்றில் பரவக்கூடிய நோய். குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் – குழந்தைகள், வயதானவர்க, கருவுற்றிருக்கும் பெண்கள், பிரசவம் ஆன பெண்கள், அசுத்தமான இடத்தில் வசிப்பவர்கள் இவர்கள் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

மிக மிக முக்கியமான விஷயம்: இந்நோய்க்கு உண்டான மருந்துகளை சரியான அளவில் மருத்துவர் சொல்லும்வரை நடுவில் நிறுத்தாமல் சாப்பிட வேண்டும். நடுவில் நிறுத்துவதால் மறுபடி இந்நோய் தீவிரமாக வளர வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிடங்களில் எச்சில் துப்புவது, வாயை மூடாமல் தும்முவது, இருமுவது போன்றவற்றை செய்யக் கூடாது. உங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் இதனால் இந்நோய் பரவும்.

புகைபிடிக்கும் வழக்கம் உள்ள தந்தைமார்கள் வீட்டிற்கு வந்து தமது குழந்தைகளை கொஞ்சும்போது குழந்தைகளுக்குப் பரவ வாய்ப்பு உண்டு என்று பொதிகை தொலைக்காட்சியில் இன்றைய ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சியில் (இப்போது மாலை 6 – 6.3௦ மணிக்கு ஒளிபரப்பாகிறது) டாக்டர் கூறினார். புகைபிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள், வீட்டிற்கு வந்தவுடன் வாயை நன்கு விளக்கி, நிறைய நீர்விட்டு கழுவ வேண்டும். அதேபோல கைகளையும் சோப்புப் போட்டு நன்றாக சுத்தம் செய்துகொண்ட பிறகே குழந்தைகளை தூக்க வேண்டும். புகைபிடிப்பவர்களின் நுரையிரலில் தங்கி இருக்கும் புகை, அவர்கள் மூச்சுடன் கலந்து மற்றவர்களுக்குப் பரவும் அப்பாயம் இருக்கிறது.

சுத்தமான சுற்றுபுறம், ஆரோக்கியமான, முழுமையான உணவு, தவறாத உடற்பயற்சி மூலம் இந்த நோயை தடுக்கலாம்.

“காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி?” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.//
  //
  அருமையான கட்டுரை.
  வாழ்த்துக்கள்.

 2. கண்ணைப் பற்றி மிக நன்றாக அலசி முடித்ததற்கு வாழ்த்துக்கள். உடலின் மற்ற பாகங்களையும் அலசி விடலாம்.வாருங்கள் பாராட்டுக்கள் ரஞ்சனி. தொடரட்டும் உங்கள் தொண்டு

  1. வாங்க விஜயா!
   பாராட்டுக்களுக்கு நன்றி. உங்களைபோல தொடர்ந்து படித்து உற்சாகம் அளிக்கும் கருத்துரை வழங்குபவர்கள்தான் இந்தக் கட்டுரைகளின் ஆதார சுருதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.