கீரை சமையல், கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா

ருசி

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

அதிசயமாக நானும் கடைக்கு வருகிறேன். காய்கறிகள் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஏதாவது புதுசா யோசனை தோன்றும். எங்கேயும் போகாதவர்கள் சொன்னால், சரி வா பாட்டி நீ கடையில் ஏறி இறங்கினால் போதும். வா என்று உறுதியாகச் சொல்லவே நான் கிளம்பிப் போய் கடையில் இறங்கியும் ஆயிற்று.எல்லா காய்களையும் பார்த்து இதில்,அது செய்யலாம், அதில் இது செய்யலாம் யோசனை போய்க்கொண்டே இருந்தது. தவிர ப்ராக்டிகலாக ஒன்றுமில்லை. மளமளவென்று மாமூலாக வாங்கும் காய்களுக்கு லிஸ்ட் சொல்லிவிட்டு,கீரை வகைகளைப் பார்த்தால் ,பெருஞ்சீரகக் கீரை, இன்னும் பலகீரைகள் வகைவகையாகக் கொட்டிக் கிடந்தன. பெருஞ்சீரகக் கீரைதான் சோம்புக் கீரை. பெங்களூர், காட்மாண்டு, ஜெனிவாவில் இதை வாங்குவது உண்டு. கர்நாடகாவில் ஃபேமஸ் இந்தக் கீரை. பாணந்தி,அதாவது பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிரகான காலத்தில் பத்தியச் சமையலுக்கு இது மிகவும் நல்லது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சின்னக் கட்டாக ஒன்று வாங்கி வந்தேன். இங்குள்ள பேத்திகள் விரும்புவார்களே மாட்டார்களோ என் யோசனையும் வேறு.

p1020374
குறுக்கு வழியாக இட்டிலிக்கு அரைத்த உளுந்து மாவில் ஒரு அறைக் கிண்ணம் எடுத்தேன். அது தண்ணீர் விட்டு அரைத்த மாவு இல்லையா? அது கொண்டவரையில் கடலை மாவைத் தூவிப் பிசறினேன். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, இஞ்சி முதலானவைகளைச் சேர்த்து, நன்றாக ஆய்ந்து நறுக்கி சோம்புக் கீரையையும் சேர்த்துப் பிசறி , எண்ணெயைக் காயவைத்து அதில் மாவைக் கிள்ளி பகோடாக்களாகப் போட்டு சிவக்கவிட்டுப் பொரித்தெடுத்தேன்.
மெது பகோடாக்கள் நல்ல ருசியுடன் இருந்தன. கொஞ்சம்தான் செய்திருந்தேனா. இன்னமும் தேவை இருந்தது. பின்னொரு முறை செய்தால் போயிற்று. உங்களுக்கு இஷ்டமிருந்தால் நீங்களும் செய்யலாமே. இப்படி ஒரு பேச்சு உங்களிடம் நேரில் சொல்லலாம் போலத் தோன்றியது. சும்மா ஒரு திட்டம் மனதில் தோன்றிய அளவு செய்து பாருங்கள்.

p1020376
இந்தக் கீரையைப் போட்டு காரசாரமாக அடை செய்யலாம். உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்புகளுடன் சேர்த்தோ, தனித்தோ வடை தட்டலாம். இந்தக்கீரை மருத்துவ ரீதியாக உடம்பிற்கு நல்லதைச் செய்யக் கூடியது. சுத்தம் செய்த கீரையை நிறைய சேர்த்துப் போடுங்கள். பார்ப்பதற்கும் பசுமையாக இருக்கும்.

Advertisements

“மாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. ohh good..idli batter and besan!!…fantastic combination..we can add anything to that for flavour..taste is already guarenteed when we fry that..first time in indian cooking scenario you are introducing urad dal, rice, besan combination, as for as i know(forgive me if there is an indian dish available already)..thank you …

  2. எங்கள் ஊரில் சோம்பு கீரை கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் செய்து பார்த்து விடுகிறேன்.
    பக்கோடா பார்க்க மிக அருமையாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.