குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

முதல் குழந்தை – இரண்டாவது குழந்தை மேலாண்மை!

செல்வ களஞ்சியமே – 62

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

அந்தக் காலத்தில் நாங்கள் 5 வயதில்தான் பள்ளிக்கூடம் சேருவோம். அதுவரை வீட்டில் கொட்டம் அடித்துக்கொண்டு ஆடிபாடிக் கொண்டிருப்போம்.  திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாட உறவினர் வீடு, கோவில் குளம் என்று  அம்மா எங்கு போனாலும் கூடவே போவோம். அ, ஆ கூட வீட்டில் சொல்லித் தரமாட்டார்கள். ஆங்கிலம் என்பது நாங்கள் அறியாத ஒன்று! ஐந்தாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துக்கள் சொல்லித் தருவார்கள். நாள் முழுவதும் கொண்டாட்டம்தான். கவலையில்லாத காலம்.

இப்போது எவ்வளவு மாறிவிட்டது! வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையென்றால் எட்டு ஒன்பது மாதத்திலேயே டே கேர் மையத்தில் விட்டுவிடுகிறார்கள். அங்கும் அவை சந்தோஷமாக இருக்க முடியாது. அவர்களின் ஆளுகையில் அந்தக் குழந்தை தனது சுதந்திரத்தை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பிக்கிறது. அம்மா கொடுத்தனுப்பும் உணவு என்றாலும் அம்மாவின் பாசம் அரவணைப்பு கிடைக்காது.

இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். காலம் மாறி வருகிறது. அதனால் இப்படி என்று காரணம் காட்டலாம். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பாவது அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும். அந்த வசதியை, சின்ன சுகத்தை குழந்தைகளுக்கு நாம் கொடுக்கலாம், இல்லையா?

முதல் குழந்தை எப்போதும் சில வருடங்களுக்கு குழந்தையாக இருக்கும் – அதாவது அதற்கு தம்பி அல்லது தங்கை பிறக்கும்வரை. தம்பி தங்கை பிறந்துவிட்டால் அடுத்த நொடி அது அக்கா (அ) அண்ணா ஆகிவிடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் புதிதாகப் பிறந்த குழந்தையின் மேல் அக்கறை காட்டத் துவங்குவார்கள். முதல் குழந்தை தான் ஓரம் கட்டப்படுவதாக நினைக்க ஆரம்பிக்கும். இதனால் சில குழந்தைகள் உடல் இளைத்து காணப்படுவார்கள். இவர்களை செவலை குழந்தைகள் என்பார்கள்.

இத்தனை நாட்கள் அப்பா அம்மாவின் ஒட்டு மொத்த அன்பையும் பாசத்தையும் அனுபவித்து வந்த குழந்தை செய்வதறியாமல் விழிக்கும். புது பாப்பா தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று நினைக்க ஆரம்பிக்கும். மனதிற்கு ஒரு பொறாமை மெல்ல மெல்ல உருவாகும். இந்த நிலையை பெற்றோர்கள் மட்டுமே சரிசெய்ய முடியும். அம்மா புது குழந்தையுடன் தனது நேரத்தை செலவிட வேண்டியிருப்பதால், அப்பாவின் பங்கு இங்கு அதிகம் தேவை.

முதல் குழந்தையை இரவில் தன்னுடன் படுக்க வைத்துக் கொள்ளலாம். சின்னக் குழந்தையின் மேல் அதன் கவனம் போகாத அளவிற்கு முதல் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மா இரண்டாவது குழந்தை பெறத் தயாராகும்போதே முதல் குழந்தையையும் மனதளவில் இரண்டாவது குழந்தையை ஏற்றுக்கொள்ளத் தயார் செய்ய வேண்டும்.

48

‘உனக்கு ஒரு தம்பி/தங்கை வரப்போகிறாள்/ன். என்ன பெயர் வைக்கலாம்?’ என்று முதலிலேயே தயார் செய்ய ஆரம்பியுங்கள்.

குழந்தைகளுக்கு நடுவில் வயது வித்தியாசம் அதிகம் இருந்தால் பரவாயில்லையா? 5 வயதுக் குழந்தையால் தங்கைப் பாப்பாவை மனதார ஏற்றுக் கொள்ள முடியுமா? இரண்டே வயது வித்தியாசம் இருக்கும் குழந்தை என்ன செய்யும்? இதெல்லாம் பதில் சொல்ல இயலாத கேள்விகள். 5 வயது குழந்தை தங்கை பாப்பாவை தன் எதிரியாக நினைக்கலாம்; இரண்டு வயதுக் குழந்தை சமர்த்தாக அடுத்த குழந்தையுடன் விளையாட ஆரம்பிக்கலாம்.

ஒரு விஷயம் பெற்றோர்கள் நினைவில் இருத்த வேண்டும்: என்னதான் அடுத்த குழந்தை பிறந்துவிட்டாலும், முதல் குழந்தை இன்னும் குழந்தைதான் என்பதை மறக்கக்கூடாது. ‘நீ அக்கா; நீதான் தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும்; நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும்,’ என்றெல்லாம் சொல்லாதீர்கள். விட்டுக்கொடுப்பது, குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பதெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகள். குழந்தைகளுக்கு புரியாது. என்ன சொல்லலாம்?

‘இது சரியான மக்கு பாப்பா. இதுக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் எல்லாம் சொல்லித் தரணும்.’ (இரண்டாவது குழந்தை வளர்ந்த பிறகு இதைச் சொல்லக்கூடாது. அது உங்களுடன் சண்டைக்கு வரும்!) ‘இவ பெரியவளான உடனே உன்னோட விளையாடுவா; நீ அவளுக்கு நிறைய விளையாட்டு சொல்லிக் கொடுக்கணும், சரியா?’ ‘உன்னை அக்கான்னு கூப்பிடுவா, பாரு!’ ‘இது நம்ம வீட்டு பாப்பா; நாமதானே பார்த்துக்கணும்?’ ‘இந்த பாப்பா தூங்கவே மாட்டேங்கறா, நீ ஒரு பாட்டு பாடேன்…’ ‘அக்கா பாடறது இந்த பாப்பாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, பாரேன், நீ பாடின உடனே தூங்கிட்டா…!’ ‘அவளுக்கு நீ ஹோம்வொர்க் பண்ண சொல்லிக் கொடு, சரியா?’ ‘பாப்பாவிற்கு ஒரு கதை சொல்லும்மா…!’

அக்காவிற்கு நிறைய முக்கியத்துவம் கொடுங்கள். எத்தனை தான் செய்தாலும் லேசான பொறாமை இருக்கத்தான் செய்யும். எந்தக் காரணம் கொண்டும் இரண்டு குழந்தையையும் ஒப்பிடாதீர்கள். இருவருக்கும் விவரம் தெரிந்த பின் ஒரு குழந்தையின் எதிரில் இன்னொரு குழந்தையை குறைத்துப் பேசாதீர்கள். ஒரு குழந்தையின் பிறந்த நாளின் போது இன்னொரு குழந்தைக்கும் புது ஆடை, விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அனாவசிய போட்டி பொறாமை இவைகளைத் தவிர்க்கலாம்.

இந்த சமயத்தில் எனக்கு என் உறவினர் வீட்டில் நான் பார்த்த ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டில் அக்கா, தங்கை என இரண்டு குழந்தைகள். போட்டி பொறாமை எல்லாம் உண்டு. இத்தனைக்கும் அக்கா ஐந்து வயது பெரியவள். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அக்காவின் அறை வாசலில் எழுதியிருந்தது. ‘Children not allowed’ (Megna) என்று. மேக்னா உள்ளே வரக்கூடாது என்றால் அம்மா கோபித்துக் கொள்ளுவாள். ஆனால் மேக்னா உள்ளே வருவது அக்காவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தக் குழந்தை தன் மனதில் இருப்பதை இப்படி சொல்லியிருந்தது, சுவரில் எழுதுவதன் மூலம்!

அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எப்படி அடிக்கடி தங்களுக்குள் சண்டை போட்டு அடுத்த நாளே சேர்ந்து கொள்ளுகிறார்களோ, அதேபோலத்தான் இந்த போட்டி, பொறாமை, சண்டை எல்லாம். அளவுக்கு மீறிச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் வேலை.

Advertisements

“முதல் குழந்தை – இரண்டாவது குழந்தை மேலாண்மை!” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. முதல் குழந்தையிடம் என்ன சொல்ல வேண்டும்…? எப்படி சொல்ல வேண்டும்…? அதுவும் அளவோடு இருக்க வேண்டும் என்பதை அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் அம்மா…

  2. இரண்டாவது குழந்தை வரப் போவதைப் பற்றி முதல் குழந்தையிடம் சொல்லிடுங்க என்று பலரும் எழுதி படித்துள்ளேன். இது சம்மந்தப்பட்ட பிரசச்னைகளை கேள்விப்பட்டும் இருக்கின்றேன். ஆனால் இங்கே தலைகீழாக உள்ளது. இரண்டு வருடமாகத்தான் இங்கே போட்டிகள் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நிமிடமும் போட்டியும் வாயடித்தும் கொண்டும் எங்கள் இருவரையும் சண்டை போட வைத்து விடுகின்றார்கள். ஆனால் நாங்க இருவரும் அவர்கள் விசயத்தில் இது இப்படி? ஏன் இப்படி? என்று உள்ளே நுழைந்தால் நாங்க அடித்துக் கொள்வோம் அப்புறம் பேசிக் கொள்வோம்? உங்களுக்கென்ன? என்று ஒவ்வொரு முறையும் பல்பு தந்து விடுகின்றார்கள்? இதை எப்படி எடுத்துக் கொள்வது?

  3. வீட்டிற்கு வந்த பின்பாவது அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும். அந்த வசதியை, சின்ன சுகத்தை குழந்தைகளுக்கு நாம் கொடுக்கலாம், இல்லையா?

    குழந்தைகளை குழந்தைகளாகப்பார்க்கும் மனோபாவமே மாறி வருகிறது..!

  4. மிக அருமையாகச் சொன்னீர்கள்! இரண்டாவது கருவில் இருக்கும் போதே பெரியவளுக்கு அடுத்த பாப்பா பிறக்கப் போகிறது என்று சொல்லி வளர்த்தோம்! இப்போது அவளும் தங்கையிடம் பாசமாக இருக்கிறாள். பயனுள்ள பதிவு! நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.