காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுரைக்காய் கூட்டுடன் கொஞ்சம் வரலாறு

காய்கறிகளின் வரலாறு –  18

DSCN2604

சுரைக்காய்
ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சுரைக்காயின் ஆசிய வருகை 8 அல்லது 9 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆப்பிரிக்க, ஆசிய பகுதிகளில் உணவுக்காக மட்டுமல்லாமல் முற்றி, பழுத்து, காய்ந்த சுரைக்காயின் ஓடுகள் நீர் உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதற்கும் உபயோகமாகிறது. இந்தப் பகுதிகளில் சுரைக்காய் ஓடுகளில் இசைக்கருவிகளும் செய்யப்படுகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் விளைச்சலும் அதிகம், பயன்பாடும் அதிகம். தம்புரா, ருத்ரவீணை உள்ளிட்ட இசைக்கருவிகள் சுரைக்காயின் ஓடுகளில் தயாராகும் இந்திய இசைக்கருவிகள். வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய சுரைக்காய், அதில் உள்ள நீர்ச்சத்து காயாக அறியப்பட்டாலும் அதில் நீர்ச்சத்து இல்லை.

சமைப்பதற்கு உகந்த சுரைக்காய் எது?
இளம் சுரைக்காயே சமைத்து உண்ண உகந்தது. சுரைக்காயின் தோலில் நகத்தை பதிக்கும்போது அதிக அழுத்தம் இல்லாமல் இறங்கினால் அது இளம் சுரைக்காய். தோல் தடிமனான சுரைக்காயில் சதைப் பகுதி குறைந்திருக்கும், பஞ்சு போன்ற விதைப் பகுதி அதிகமாக இருக்கும். இதை சமைக்கப் பயன்படுத்த முடியாது.

சுரைக்காயில் உள்ள சத்துக்கள்
100கிராம் சுரைக்காயில் கார்போஹைட்ரேட் 3.69கி, நார்ச்சத்து 1.2கி, கொழுப்பு 0.02கி. இவை தவிர, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மாங்கனீஸ்,மக்னீசியம், பாஸ்பரஸ், ஜின்க் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உயிர்சத்துக்களும் அடங்கியுள்ளன.

சுரைக்காயில் ஒரு எளிய ரெசிபி…

DSCN2616

சுரைக்காய் கூட்டு
தேவையானவை:
நறுக்கிய சுரைக்காய் – ஒரு கிண்ணம்
பாசிப்பருப்பு – கால் கிண்ணம்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி.
தாளிக்க:
நெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை –  ஈர்க்கு

செய்முறை:
பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.  பாசிப்பருப்பை வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் நறுக்கிய சுரைக்காயைச் சேர்க்கவும். பிறகு இதில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து காயை மிதமான தீயில் வேகவிடவும். காய் வெந்ததும் நெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s