சிறுநீரகம், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

துப்புரவு தொழிற்சாலையை சரியாக இயங்க வைப்போம்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 39

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

உலக சிறுநீரக நாள் – சிறப்புப் பதிவு

போனவருடம் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து எங்கள் ஊரில் ஒரு புது சட்டம் அமலுக்கு வந்தது. அதாவது வீட்டில் சேரும் குப்பைகளை உலர்ந்த குப்பை, ஈரப்பசையுள்ள குப்பை என்று அவரவர் வீடுகளிலேயே பிரித்து தனித்தனி பைகளில் போட்டு வைத்துவிட வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு மூட்டை கட்டிபோடுவது கூடாது என்று. ஊரே அல்லோலகல்லோலப் பட்டுவிட்டது. அப்படிப் போடப்பட்ட குப்பைகளை மட்டுமே நகரசபை ஊழியர்கள் வந்து எடுத்துக் கொண்டு போவார்கள். இல்லாத பட்சத்தில் குப்பைகளை அவரவர்களே அகற்ற வேண்டும் என்று செய்தித்தாள்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆயிற்று சரிவர புரிந்துக்கொண்டு குப்பைகளை இனம் பிரிக்க.

ஒரு நகரத்தில் இப்படி என்றால் நம் உடம்பில் சேரும் குப்பைகளை அகற்றும் உறுப்பை நாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அதை எப்படி சரிவர கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியுமா? நான் எந்த உறுப்பு பற்றிப் பேசுகிறேன் என்று புரிந்திருக்கும். சிறுநீரகம் பற்றித் தான் சொல்லுகிறேன்.

ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் வந்தன. அப்போது இந்த சிறுநீரகங்களை ‘துப்புரவுத் தொழிற்சாலை’ என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டிருந்தார். எத்தனை பொருத்தமான பெயர்!

ஒரு நாள் சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தினாலும், நம் உடல் நாறிப்போய்விடும். ஆனால் இந்த சிறுநீரகம் பற்றி நமக்கு எத்தனை தூரம் தெரியும்?

மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமையை சிறுநீரக நாள் என்று உலகமுழுவதும் அனுசரிக்கிறார்கள். நமது உடம்பின் மேல்பகுதி முடியும் இடத்தில் வலப்புறம் சின்ன அவரை வடிவத்தில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். இவை பழுதடையும்போதுதான் இவற்றின் நினைவே நமக்கு வருகிறது.

மனித இதயம் தான் இடைவிடாமல் வேலை செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது சிறுநீரகங்களின் வேலையும் சற்றும் குறைந்தது அல்ல. இருபத்து நான்கு மணி நேரமும் நம் உடலில் சேரும் கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால் நமது உடலின் இரசாயன மாற்றங்கள் நிலையாகவும் இரத்த அழுத்தம் சீராகவும், எலும்புகள் உறுதியாகவும், சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி சரியான அளவிலும் இருக்கிறது.

ஆனால் வயது ஏற ஏற நமது சிறுநீரகங்களும் பழுதடைய ஆரம்பிக்கின்றன. CKD எனப்படும் Chronic Kidney Disease நமது சிறுநீரகங்களை மெல்ல மெல்ல பழுதடையச் செய்கிறது. பத்து பேர்களில் ஒருவருக்கு இந்த நோய் சிறிய அல்லது பெரிய அளவில் இருக்கிறது. இந்த நோய் எல்லா வயதினருக்கும் வரலாம். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக உடல் பருமன் ஆகியவை  இந்த CKD க்குக் காரணங்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த நோய் இருப்பதே நோய் முற்றும் வரை தெரியாது. 90% சிறுநீரக பயன்பாடு குறைந்த பின்னர் தான் தெரிய வரும். கால்களில் வீக்கம், உடல் அயர்வு, கவனக் குறைவு, பசியின்மை, நுரையாக வெளிவரும் சிறுநீர், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், மூச்சு விட சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

இந்த நோய் பரம்பரையாகவும் வரும். எந்த வயதில் வந்தாலும், ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் சிகிச்சை அளித்து, சிறுநீரகம் மேலும் பழுதடையாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலை சிகிச்சையால் இந்நோய் மேலும் சிக்கல் ஆகாமலும், நோயினால் தினசரி வாழ்க்கை பாதிக்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.

எப்படி இருதயத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுகிறோமோ, அதே போல சிறுநீரகத்தையும் சோதித்துக் கொள்ள வேண்டும். CKD மிகவும் கொடுமையான நோய் என்பது வருத்தமான விஷயமாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் சிகிச்சை அழிப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

CKD இருக்கிறதா என்றறிய உதவும் பரிசோதனைகள்:

 • சிறுநீரில் புரதம் அல்லது அல்புமின் இருக்கிறதா என்றறிய ஒரு பரிசோதனை.
 • க்ரியாடினின் (Creatinine) அளவு கண்டறிய உதவும் இரத்தப் பரிசோதனை.
 • இரத்த அழுத்த பரிசோதனை.

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு:

 • உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
 • இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருத்தல்
 • அவ்வப்போது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து அதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்
 • ஆரோக்கியமான சாப்பாடு முறைகளைக் கடைப்பிடித்தல், உப்பைக் குறைத்தல்.
 • உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்
 • போதுமான அளவு நீர் குடித்தல்
 • அதிக அளவில் வலி மாத்திரைகளை சாப்பிடாதிருத்தல்
 • சிருநீரகங்களுக்கும் நமக்கு மிக முக்கியமானவை. அவற்றை பழுதுபடாமல் காப்பதும் நம் கடமை.

 

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

Advertisements

“துப்புரவு தொழிற்சாலையை சரியாக இயங்க வைப்போம்!” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. CKD பற்றிய தகவல்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அம்மா… நன்றி…

  இன்றைக்கு எனது பகிர்வு சேரும் குப்பைகள் பற்றித் தான் … ஆனால் வேறு… என்னவொரு பொருத்தம் பாருங்கள்…

  1. வாங்க பாண்டியன்!
   பார்த்துக்கொண்டே இருங்கள், ஒரு நாள் எல்லாம் புத்தகமாக வந்தே விடப்போகிறது!
   தொடர்ந்த வருகைக்கும், உற்சாகமான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.