அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014, பெண் அரசியல்வாதிகள், பெண்ணியம்

மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!

அரசியல் பேசுவோம்

மக்களவை தேர்தல் – 2014
மக்களவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40. சென்ற தேர்தலில் திமுக சார்பில் நாகர்கோவிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ. ஹெலன் டேவிட்சன் மட்டுமே பெண். இந்த தேர்தலில் திமுக சார்பில் 35 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். சேலத்தில் போட்டியிடுகிறார் செ. உமாராணி. ஈரோட்டில் போட்டியிடும் எச். பவித்தர வள்ளி, எம்பிஏ பட்டதாரி. திமுக பட்டியலிலேயே இவர் தான் இளையவர், வயது 26.
ஜெ. ஜெயலலிதாவை பொதுச்செயலாளராகக் கொண்ட அதிமுகவில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டியிருக்கிறார்கள். இதில் 4 பேர் பெண்கள். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல் பி.காம் பட்டதாரி. திருவண்ணாமலையில் போட்டியிடும் வனரோஜா பி.எட் படித்தவர். திருப்பூரில் போட்டியிடும் வி. சத்தியபாமா எம்.ஏ பட்டதாரி. எம்.ஏ படித்த தென்காசி தொகுதி வேட்பாளர் வசந்தி முருகேசன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இணைந்து முதல்முறையாக திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து தேர்தலை சந்திக்கின்றன. இரண்டு கட்சிகளும் தலா 9 இடங்களில் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் இருவர் பெண்கள். வடசென்னையில் போட்டியிடுகிறார் உ.வாசுகி. இவர் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் களப்பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எஸ். தமிழ்ச்செல்வி. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாஜக, தேமுதிக கூட்டணி வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s