காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17

DSCN0297

சுண்டைக்காய்
கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும் காணப்படுகிறது.

சுண்டைக்காயைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சுண்டைக்காய் விற்பனைக்குக் கிடைத்தாலும் வியாபார முறையில் இது வளர்க்கப்படுவதில்லை. தோட்டங்களில் வேலி ஓரமாக வளரும் இந்தச் செடியின் காய்களே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இன்னொரு சிறப்பு, பூச்சிகளை விரட்டுவதற்காக இந்தச் செடிகளின் மேல் எந்தவித வேதியியல் மருந்துகளும் தெளிக்கப்படுவதில்லை.பிஞ்சு சுண்டைக்காய்கள் சமையலில் ருசியைக் கூட்டக்கூடியவை. இவை அடர் பச்சை நிறத்தில் இருக்கும். வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கள் முற்றி, விதைகள் அதிகமாக இருக்கும். இவற்றை வற்றல் செய்வதற்கு பயன்படுத்தலாம்.

சுண்டைக்காயில் உள்ள சத்துக்கள்
சுண்டைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு,சர்க்கரை போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜின்க், மக்னீஷியம் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் இ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் உண்டு.

சுண்டைக்காயில் காமாட்சி மகாலிங்கம் தந்த ஒரு பாரம்பரிய ரெசிபி…

சுண்டைக்காய்

சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு
தேவையானவை:
சுண்டைக்காய் – அரை கப்பிற்கு அதிகம்
பலாக்கொட்டை – 8
புளி – ஒரு எலுமிச்சையளவு (பழைய புளியாக இருந்தால் மிகவும் நல்லது)
கடுகு – அரை தேக்கரண்டி
மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – வேண்டிய அளவு
ருசிக்கு – உப்பு
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
சாம்பார்பொடி – 3 தேக்கரண்டி
அரிசிமாவு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை  – ஈர்க்கு
துளி – வெல்லம்

செய்முறை:
புளியை வென்னீரில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து 2 கப்பிற்கு அதிகமாக சாறு எடுத்துக் கொள்ளவும். சுண்டைக் காயின் காம்புகளை நீக்கவும். சுண்டைக்காயை அலசி, நன்றாக நசுக்கவும். பின்னர் தண்ணீரில் அலசினால் முற்றின விதைகள் இருந்தால் நீங்கி விடும். காயை வடிக்கட்டவும். இதே முறையில் பலாக்கொட்டையையும் மேலே இரண்டு தட்டு தட்டி கடினமான தோலை நீக்கவும். உள்பருப்பை சீராக நறுக்கிக் கொள்ளவும் அல்லது உடைத்துக் கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மிளகாய் முறையே பருப்புகள், பெருங்காயம் வெந்தயம் தாளித்துக் கொட்டி, சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து காய் நன்றாக வதங்கும்படி வதக்கவும். கறிவேப்பிலையும் சேர்த்து, சாம்பார் பொடியையும் சேர்த்து, தீயாமல் பிரட்டிவிட்டு, புளி தண்ணீரைச் சேர்க்கவும். உப்பு, பலாக்கொட்டைசேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லமும்தான்.
குழம்பு சுண்டி, காயும் கொட்டையும் வெந்தவுடன், அரிசிமாவைத் துளி தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கமகமவென்று குழம்பு தயார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s