காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல்

எளிய சமையல்

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும். ஜெனிவா குறிப்புதான் இதுவும், கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.

வேண்டியவைகள் :
கத்தரிக்காய் பெரியது – 2
வெங்காயம் திட்டமான அளவு –  2
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம் – சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை – வேண்டிய அளவு
உப்பு– ருசிக்குத் தேவையான அளவு
உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல் – 4
நல்லெண்ணெய் –  2 டேபிள் ஸ்பூன்

கத்தரிக்காய் 1

செய்முறை:
அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாக எண்ணெயைத் தடவவும். மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில், காயை வைத்து, ஹை பவரில் 3 நிமிஷங்கள் சூடாக்கவும். திரும்பவும் காயைத் திருப்பி வைத்து 4  நிமிஷங்கள் அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.

p1010679

காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உரித்தெடுக்கவும்.

p1010680
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு, மிளகாய், வெந்தயம் இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். எள், சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய், புளி, வெந்தயம் இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நன்றாக மசிந்த பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து உப்பைச் சேர்க்கவும். கடுகு, பெருங்காயப் பொடியை, மிகுதி எண்ணெயில் தாளிதம் செய்யவும்.

p1010686

பின் குறிப்புகள்:

  • நல்லெண்ணெய், நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
  • வெங்காயத்திற்குப் பதில் தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும் சேர்த்து அரைக்கலாம்.
  • புளி சேர்த்த துவையலில் சிவக்க வறுத்த வெந்தயம் ருசியைக் கொடுக்கும். சுட்ட கத்தரிக்காயுடன் துளி தேங்காய், இஞ்சி, ப.மிளகாய் சேர்த்தரைத்த தயிரில் கலந்து கடுகு தாளித்தால் பச்சடி தயார். கொத்ஸும் தயாரிக்கலம். பர்த்தா தயாரிப்பதும் இப்படி சுட்ட கத்தரிக்காயில்தான். இப்படி சுட்ட கத்தரிக்காயில் அநேகவிதம் தயாரிக்கலாம்.
  • அரைக்கும் போதே கொத்தமல்லி, கறிவேப்பிலையை மறக்க வேண்டாம். உப்பு காரம் , தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
  • கத்தரிக்காய் சேர்க்கும் பத்திய சமையலில் சுட்ட காயை மசித்து துளி நெய்யில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, உப்பு போட்டு கொடுப்பார்கள். கிராமத்து ஐட்டம் இது. எதுவோ வேண்டியவர்கள் செய்து பாருங்கள்.
Advertisements

“சுட்ட கத்திரிக்காய் துவையல்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. இந்த செய்முறை அதிகம் வேலை. இலங்கையில் நாங்கள் தேவையான கத்தரிக்காயை சுட்டு, தோலை உரித்து பிசைந்து விட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், அளவாக உப்பு,சுவைக்குத் தக்க இறுக்கமான பழப்புளிச் சாறு சேர்த்து பிசைந்து விட வேண்டியதே! வயிறாற சோறு, பிட்டு, ரொட்டி உண்ணலாம்.
    இங்குள்ள கத்தரிக்காயில் களித் தன்மை குறைவு, நார்த் தன்மையால் அதே சுவை கிடைப்பதில்லை.
    ஔவையார் பாடிய
    // வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் சற்றே

    முரமுறெனப் புளித்த மோரும்-தரமுடனே

    புல்வேளூர்ப் பூதன் பரிந்தளித்த உணவு

    எல்லா உலகும் பெறும் என்று//

    இந்த “வழுதுணங்காய் வாட்டும்” என்பதே, இலங்கைச் செய்முறையை உடைய இந்த துவையலோ என நான் எண்ணுவதுண்டு

  2. இந்த கத்திரிக்காயை சுட்டு ”பர்த்தா” தில்லியில் எப்போதும் செய்வேன். துவையல் அரைத்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

johan paris க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.