அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?

அரசியல் பேசுவோம்

இப்போது நடுத்தர, மேல்தட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி குறித்து இந்தியாவைக் காப்பாற்ற வந்த ரட்சகன் பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. தங்களை அறியாமலேயே மேலோட்டமாக வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பேசி மோடி என்கிற பாசிச கோட்பாடுகளைக் கொண்ட அரசியல்வாதிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அவர்கள் எழுப்பும் முக்கியமான 5 கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன்.

நரேன் ராஜகோபாலன்
நரேன் ராஜகோபாலன்

1) மோடி தான் கலவரங்களுக்கு பின்னான ஆள் என்றால், ஏன் மூன்று முறை குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ?

வலிமையான எதிர்ப்பு சக்திகள் இல்லாத இடத்தில் தொடர்ச்சியாக மக்கள் ஆட்சியில் இருப்பவர்கே வாக்களித்து இருக்கிறார்கள். குஜராத்தில் அது நடந்தது. குஜராத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எவருமே தீர்க்கமாக எதிர்க்க முடியவில்லை. மோடியின் ஆட்சியில் அத்தனை இந்துத்துவ இயக்கங்களும் மாநிலம் முழுக்க பரவி, ஒரு விதமான அச்சுறுத்தும் நிலையிலேயே மக்களை வைத்திருந்தார்கள் என்பது தான் நிலை. உண்மையிலேயே மோடியின் ‘நல்லாட்சி’யின் கீழ் குஜராத் ஏக போகமாக வளர்ந்திருந்தால், அவர்கள் 2013 தேர்தலில் முழுமையான ஸ்வீப் அடித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு முந்திய ஆட்சியில் பாஜக வென்றது 117/182; 2013-இல் வென்றது 120/182. ஆக மோடியின் உருவாக்கப்பட்ட பிம்பம் இருக்குமளவிற்கு வாக்குகள் குஜராத்திலேயே விழவில்லை என்பது தான் நிதர்சனம். இது தான் யதார்த்தம். வலிமையான எதிர்ப்பு பீகாரில் உருவாகும் வரை லாலு பிரசாத் யாதவும் இரண்டு முறை தொடர்ச்சியாக முதல்வரானர் என்பது குறிப்பிடத்தக்கது.

2) 2002 படுகொலைகளை முன்வைத்தே நீங்கள் மோடியை பார்க்கிறீர்கள். மோடி எல்லோரையும் சமமாக தான் நடத்துகிறார். அவருடைய வெற்றியின் மீது உங்களுக்கு பொறாமை ?

2002 படுகொலைகளை மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இருக்கிறோம். இஸ்லாமியர்கள் உட்பட யாருக்கும் கடந்த காலத்திலேயே வாழ விருப்பமில்லை. மோடி எல்லோரையும் சமமாக நடத்தியிருந்தால், நாங்களே அவருக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறோம். நிஜத்தில் என்ன நடந்தது ? மொத்த மக்கள் தொகையில் 10% இருக்கும் இஸ்லாமியர்களின் மீது அவருக்கு பரிவும், கரிசனமும் இருந்தால் 2008 தேர்தலில் குறைந்தபட்சம் பத்து பேரையாவது பாஜக சார்பாக நிறுத்தியிருக்க வேண்டும். செய்யவில்லை. 2013 தேர்தலிலாவது நிறுத்தியிருக்க வேண்டும். செய்யவில்லை. ஆக, முழுமையான இஸ்லாமிய எதிர்ப்பு உள்ளே ஊறிப் போகாமல் இவ்விதமான புறக்கணிப்பிற்கு சாத்தியமில்லை. இந்த நிலையில் அவர் இஸ்லாமியர்கள் நண்பர்கள், அவர்களை காபாற்றுவேன் என்று வாக்குறுதியளித்தால், எதை நம்பி வாக்களிப்பத ? வரலாறு பொய் சொல்லாது. ட்ராக் ரெக்கார்டு சரியில்லாத ஒருவரை, சிறுபான்மையினரை ஆதரிக்காத ஒரு நபரை எப்படி மததுவேஷமற்றவர் என்று நம்பி வாக்களிப்பது ?

3) இஸ்லாமியர்கள் அத்தனை பேரும் தீவிரவாதிகளல்ல. ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். மோடி அவர்களை சரியான இடத்தில் வைத்திருக்கிறார். அதனால் அவரை நாம் ஆதரிப்போம்

இந்த கூற்று மோசமான விஷயம். தீவிரவாதத்தில் மதங்கள் இல்லை. இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நாம் சிமியையும், லஷ்கர்-இ-தொய்பாவையும், இந்தியன் முஜாகீதினையும் ஒரங்கட்டினால், அதே அளவில் வி.எச்.பி, பஜ்ரங் தள், ராம் சேனா, இந்து மகிளா சபா இவற்றுக்கெல்லாம் தலைமகனாக விளங்கும் ஆர். எஸ். எஸ் வரை எல்லோரையும் ஒரங்கட்ட வேண்டும். இந்த putting them in their right place என்கிற சிந்தனையே மோசமானது.

கடவுள் இல்லையென்று சொன்னவர்களால் கோவிலும், மசூதியும், தேவாலயமும் இந்தியாவில் உடைக்கப்பட்டதாக வரலாறில்லை. ஆனால், தன்னுடைய கடவுள் உயர்ந்தது என்று சொன்னவர்கள் தான் இன்னொரு மத நம்பிக்கையை தகர்க்க செய்யும் வேலைகளை செய்கிறார்கள். மோடிக்கு பின்னாலிருந்து ஆட்டுவிப்பது ஆர். எஸ். எஸ் 2002 க்கு பின் பல்வேறு மசூதிகளை குஜராத் முழுக்க உடைத்திருக்கிறார்கள். எளிய இஸ்லாமிய மக்களை அவர்களின் வசிப்பிடத்திலிருந்து விரட்டியிருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்கள் சிஸ்தமேடிக்காக ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. சில பேர் செய்யும் தவறுக்காக எப்படி ஒட்டு மொத்தமாக இந்துக்களை குறை கூற முடியாதோ, அதே நிலை தான் இஸ்லாமியர்களுக்கும். அவர்களுக்கான இருப்பினை தரவிடாமல் அவர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தியும், அடக்கியும் வைத்திருந்தால் தீவிரவாதத்தை நாமே அடுத்த தலைமுறைக்கு விதைக்கிறோம் என்று தான் பொருள்.

gujarat

4) குஜராத்தின் வளர்ச்சி போல இந்தியாவில் வேறெந்த மாநிலமும் வளரவில்லை. மோடி வளர்ச்சி நாயகர். வளர்ச்சிக்கு எதிராக புல் பிடுங்காதீர்கள்

பல்வேறு தகவல்களின் வழியாக குஜராத்தின் வளர்ச்சி என்பது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் என்று சொல்லியாகிவிட்டது. மிக எளிமையாக புரிந்து கொள்வோம். ஒரு மாநிலமே கடந்த பத்தாண்டுகளில் முன்னேறியிருக்கிறதென்றால், ஏன் அங்கே இன்னும் 30%+ மக்கள் ஏழையாக இருக்கிறார்கள் ? வளர்ச்சி என்பது skewed ஆக இருக்கமுடியாது. சில பேர் பில்லியனர்களாகவும், பலர் சராசரிகளாகவும் இருக்கும் ஒரு மாநிலத்தை வளர்ச்சி மாநிலம் என்று சொல்வதே அபத்தம். இதற்கு பெயர் வீக்கம். அப்படி வளர்ச்சியுடையதாக அம்மாநிலம் இருந்திருந்தால் கடந்த பத்தாண்டுகளில் சராசரி குஜராத்தியின் தனி நபர் வருமானம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை என்பது தான் யதார்த்தம். இதை தொடர்ச்சியாக ‘வளர்ச்சி’ என்று சொல்வதே பாஜகவின் ஊடக மூளை சலவை.

5) ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, ஆனந்த் மஹீந்திரா, கெளதம் அதானி என நீளும் லிஸ்டில் எல்லோருமே மோடியின் நிர்வாக திறமையை பாராட்டியிருக்கிறார்கள். மோடி உண்மையிலேயே எதையும் சாதிக்காமல் இருந்தால் இவர்கள் எதற்கு மோடிக்கு ஆதரவாக பேசவேண்டும் ?

தொழிலதிபர்கள் மோடியை கண்டிப்பாக கொண்டாடுவார்கள். ஏனென்றால், மோடி வாரி வழங்கும் சலுகைகள் அப்படிப்பட்டவை. இல்லையென்றால் வெறும் 12 வருடங்களில், 100-200 கோடிகளில் வணிகம் செய்துக் கொண்டிருந்த கெளதம் அதானியின், அதானி குழுமம் இன்றைக்கு பல்லாயிரம் கோடிகள் கணக்கில் வணிகம் செய்கிறது என்று கணக்கு காட்டுமா ? இதில் நாம் கவனிக்க வேண்டியது, இத்தனை தொழிலதிபர்களும், முதலீடும் எவ்வளவு வரி வருமானத்தையும், நேரடி வேலை வாய்ப்பையும், மறைமுக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது ? மோடி முன்வைக்கும் முதலீடுகளும், அதற்கு ஈடான வேலைவாய்ப்புகளுக்கும் சம்பந்தமேயில்லை. இவை அனைத்துமே பெரு முதலாளிகளுக்கான இடமாக மாறியிருக்கிறதேயொழிய, சாதாரண மனிதர்களுக்கான இடமாக இல்லை. உண்மையான நிர்வாக திறமை என்பது ஒரு சிலரை மட்டுமே அரசு வழியாக உயர்த்துவது அல்ல, மாறாக சராசரியாக மாநில குடிமக்களை மேலுயர்த்துவது. அது நடக்காத பட்சத்தில், எவ்வளவு முதலீடுகளைப் பேசினாலும் அதனால் பயனில்லை.

“மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. 1.2013 keshubhai patel split the BJP vote.
  2. panjayat/ corporation electon , 70% muslim candidate selected for BJP .
  3. You know bajrangtal is against Modi in Gujarat. Because,he demolish 1000 of road side(Blocked)hindu temples .
  4. Below poverty line principles made by central govt. only.
  5. Always tells lie. Dont calculate direct work only .Also, calculat indirect work.
  Eg: Tata car co . may be direct work get 5000 people only. But, also calculat by car co. the SSI industry geting the employment.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.