சினிமா

பல குடும்பங்களை சீரழித்த சீட்டுகம்பெனி மோசடி!

எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி மூவரும் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ஒகேனக்கல். இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த  ஜோதிதத்தா  நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் P.T.S.திருப்பதி நடிக்கிறார். மற்றும்  உமா பத்மநாபன், நளினி, லதா ராவ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ்,காதல் தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருண்மணி முத்துகாளை,கிரேன் மனோகர்,பிளாக்பாண்டி,காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

APM_1893

ஒளிப்பதிவு    –   பி.ஜி.வெற்றி
இசை   –   சரண்பிரகாஷ்
பாடல்கள்   –   விவேகா, எழில்வாணன், தென்றல்செந்தில்
எடிட்டிங்   –  பி.மோகன்ராஜ்
கலை   –    துரைவர்மன்
நடனம்   –   தினா, நசீர்பாபு, ரமேஷ் ரெட்டி
ஸ்டன்ட்     –    இந்தியன் பாஸ்கர்
தயாரிப்பு மேற்பார்வை   –    சிவா
தயாரிப்பு    –     எ .தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி

கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் –  எம்.ஆர்.மூர்த்தி. இயக்குநரிடம் ஒகேனக்கல் என்ன மாதிரியான படம் என்று கேட்டோம்…
ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.  சீட்டுகம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டுகம்பெனி மோசடியால் பல குடும்பங்கள் எப்படி பாதிக்கின்றன என்பது தான் கதை.  இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம். நான் ஏற்கனேவே கன்னடத்தில் மூன்று படங்களை இயக்கி இருக்கிறேன். படத்தின் பெரும் பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மூர்த்தி.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s