சினிமா, விஜய் சேதுபதி

இயக்குநர் பாலா தயாரிப்பில் விஜய் சேதுபதி!

Thegidi Audio Launch (32)

இயக்குனர் பாலா – பி ஸ்டுடியோஸ் சார்பில்,  தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வசந்த குமாரன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது. சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.ஒரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளது. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது.
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் – கோவிந்த்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
கலை – மாயா பாண்டி
தயாரிப்பு – பாலா , சுரேஷ் களஞ்சியம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஆனந்த் குமரேசன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s