சுயதொழில், சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!, செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், தொழில் தொடங்க ஆலோசனை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!

சுயதொழில் செய்யவதற்கான தேடலில் நிறைய பேர் நம்முடைய தளத்திற்கு வருகை தருகிறார்கள். இமெயில் மூலமாகவும் சிறுதொழில் ஆலோசனை தேவை என்று ஆவலோடு கேட்கிறார்கள். சிறுதொழில் செய்ய விரும்புகிறவர்கள் அரசு தரும் பயிற்சிகளின் மூலமாக கற்றுக்கொள்வது பயனுள்ள வழி என்பதை சொல்ல விரும்புகிறோம். அரசின் சான்றிதழ் கிடைப்பதோடு, வழிகாட்டலும் வங்கி கடனும் இங்கே பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக சாத்தியப்படும். அந்தவகையில் மத்திய அரசின் MSME பல்வேறு சிறுதொழில் வாய்ப்புகளை அளிக்கிறது. மேலதிக தகவல்களைத் தருகிறார் தொழில் வளர்ச்சி இயக்கத்தின் துணை இயக்குனர் என். சிவலிங்கம் தெரிவிக்கிறார்.
கிண்டியிலுள்ள மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தின் சார்பில் சுய வேலைவாய்ப்புக்கும் புதிய தொழில் துவங்குவதற்கும் தேவையான பல்வேறு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மார்ச் 10ந் தேதி முதல் மார்ச் 14ந் தேதி வரை நடைபெற உள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்களான காகிதப் பை-தட்டுகள், பாக்கு மட்டை தட்டுகள், டிஷ்யூ பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஷீட், நான் ஓவன் துணிப்பைகள், மாஸ்க், தொப்பி போன்றவற்றுக்கான பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை நடைபெறுகிறது.

துரித உணவுப் பொருட்கள், ஜூஸ், ஜாம், ஊறுகாய்,பழச்சாறுகள், மசாலா பொடிகள், பானிப்பூரி, அப்பளம், வற்றல் போன்ற பொருட்களை வர்த்தக ரீதியாக தயார் செய்யும் பணிகள் குறித்தும் காலை 10.30  முதல் 1.30 வரை தனி வகுப்பாகவும் சொல்லித்தரப் பட இருக்கிறது.

சிறு இரசாயனப் பொருட்களான கிளீனிங் பவுடர், வாஷிங் பவுடர், சோப்பு, ஆயில், பினாயில், அகர்பத்திகள், மெழுகுவர்த்தி, கற்பூரம், கம்ப்யூட்டர் சாம்பிராணி, குளியல் சோப்பு, டிஸ் வாஷ் லிக்யூட் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது பற்றிய செய்முறைகள் மாலை 2 மணி முதல் 5.30 வரை சொல்லித்தரப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கைகள் தயார் செய்வது, வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தல், வங்கிக் கடன் பற்றிய தகவல்கள், தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள், இயந்திரங்கள் பற்றிய தகவல்கள், உற்பத்தி பொருட்கள் விற்பனை வாய்ப்பு ஆகியவற்றையும் இங்கே கற்றுத்தர இருக்கிறார்கள்.
இப்பயிற்சிகளில் கலந்துகொள்ள கல்வித் தகுதி தடையில்லை. 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
எஸ்சி, எஸ்டி, பிஎச் பிரிவினருக்கு கட்டண சலுகை உண்டு. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நடைபெறும் இடம் :
எம் எஸ் எம் இ வளர்ச்சி நிலையம்,
65.1
ஜி. எஸ்.டி ரோடு,
கிண்டி (எஸ்பிஐ அருகில்),
சென்னை-32.
தொலைபேசி 99403 18891, 97907 54446

“சுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி!” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.