குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?

மாலை நேர டிபன்

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம் தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம். இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக் கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம், தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும். இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது. நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான் புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

வேண்டியது:
புழுங்கலரிசி – 3 கப் (இட்டிலிக்கு உபயோகிக்கும் அரிசி)

செய்முறை:

ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாகவும், நைஸாகவும் அரைத்தெடுக்கவும். இட்டிலி வார்ப்பது போல குழித்தட்டுகளில் எண்ணெய் தடவி மாவு விட்டு ரெடி செய்யவும். சேவை நாழியில் உட்புறம் லேசாக எண்ணெய் தடவி வைக்கவும். குக்கரில் அளவாக தண்ணீர்விட்டு இட்டிலி ஸ்டேண்டை வைத்து, வெயிட் போட்டு இரண்டு விஸில் வரும் வரை மிதமான தீயில் இட்டிலிகளாக வார்க்கவும். சாதாரண இட்டிலி வார்க்க வெயிட் போட மாட்டோம்.

p1000553

நீராவி அடங்கிய பின் இட்டிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அச்சில் போட்டு அழுத்தி சேவைகளாகப் பிழிந்த எடுக்கவும்.

p10005581

சூட்டுடன் பிழியவும். திருகு முறையிலும், ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும் சேவை நாழிகள் கிடைக்கின்றன. ப்ளெய்ன் சேவை ரெடி.

p1000561

இதனுடன் குருமா சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல தாளிதம் செய்த தேங்காயை வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை. எலுமிச்சை சாற்றில் தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை சேவை. தயிரில் தாளித்து தயாரித்தால் தயிர் சேவை. எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை. வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை. மோர்க் குழம்பு, தேங்காய்ப் பாலுடனும், சாப்பிடும் வழக்கம் உண்டு. எல்லா காய் கறிகளுடனும், உப்பு சேர்த்து வதக்க ஸோயா ஸாஸ் கலந்தும் தயாரிக்கலாம். தக்காளியை உபயோகப் படுத்தலாம். குருமா தயாரித்து உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக உள்ளது. நம்முடைய ரசனைக்கு ஏற்றவாறு பலவிதங்கள். சுலபமாக மாவை அரைத்து முதல்நாளே பிரிட்ஜில் வைத்துக் கொண்டு வேண்டும் போது தயாரித்த உபயோகிக்கலாம்.

எந்த விதமான ருசி வேண்டுமோ அந்த விதமான மேல் சாமான்கள் கலவையைத் தயார் செய்து தக்கபடி ப்ளெயின் சேவையுடன், திட்டமாகக் கலந்தால் விருப்பமானது தயார். குருமா, தேங்காய்ப்பால், மோர்க்குழம்பு வகைகளை கிண்ணங்களில் ஸ்பூனுடன் கொடுத்து ப்ளேட்டில் ப்ளெயின் சேவையை உண்ணலாம். மற்ற வகைகளைக் கலந்த நிலையிலே சித்ரான்னங்கள் டைப்பில் உண்ணலாம்.

 

 

Advertisements

1 thought on “மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?”

  1. சுவையான சேவை. குருமாவுடன் சாப்பிட்டதில்லை. எள், மோர்க்குழம்பு, தயிர் இவற்றுடனும் தாளிதம் செய்து சாப்பிட்டதில்லை. என் அம்மா கிரைண்டரில் அரைத்து அதை வாணலியில் கிளறி, கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வைத்து பின்பு பிழிவார். சுவை ஜோராக இருக்கும். அன்று வீடே அமர்க்களமாக இருக்கும்….:))) மாதம் ஒருமுறை தான். நான் உதிரி மாவில் செய்து பார்த்திருக்கிறேன். இப்போ இன்ஸ்டண்ட் சேவை தான்….:)) ஆனால் அன்று அம்மா செய்த சுவை இதில் இருக்காது….:)

    அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… வாணலியில் ஒட்டிக் கொள்ளும் மொறு மொறு சமாச்சாரத்தை சாப்பிட போட்டியே நடக்கும்…:))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s