அரசியல்

பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!

அரசியல் பேசுவோம்

JJ

மக்களவை தேர்தல் – 2014

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணியில்லாமல் மக்களவைத் தேர்தலை சந்தித்திராத அதிமுக முதல்முறையாக இவர்களைத் தவிர்த்து தனித்து நிற்கிறது. காரணம் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு இருந்தாலும் பாஜக கூட்டணியில் சேராமல் தவிர்த்துவிட்டது அதிமுக. காங்கிரஸ், திமுக உறவு முடிந்து காங்கிரஸ், அதிமுக கூட்டணி உருவாகலாம் என்கிற நிலைமை வந்தபோதும் அதை தவிர்த்தார் ஜெயலலிதா. தமிழக மக்களிடையே காங்கிரஸுக்கு எதிராக இருக்கும் மனநிலையை, பாஜகவுக்கு இல்லாத செல்வாக்கு இரண்டையும் தனக்கு சாதகமான பலனைத் தரும் என்பது ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு. இடதுசாரிகள் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் அதிமுக, ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட மாநில கட்சிகளும் இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் தான்தான் என்பதை ’தமிழராக நாம் மத்திய ஆட்சியில் அமரும்போதுதான், தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும்.’ என்று சூசகமாக காஞ்சிபுரம் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கியிருக்கிறார் ஜெயலலிதா.
’’நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்னை தமிழக முதலமைச்சராக்கினீர்கள். இப்போது உங்களிடம் இதைக் கேட்கிறேன். காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை ஏற்படுத்துவோம். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நம் நாட்டின் செல்வ வளத்தையெல்லாம் கொள்ளையடித்த ஆங்கிலேயர்களை எப்படி விரட்டி அடித்தோமோ, அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை வேட்டையாடி சுரட்டிய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை விரட்டி அடிப்போம். தமிழராக நாம் மத்திய ஆட்சியில் அமரும்போதுதான், தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும். அதனால் அதிமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று பேசினார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா.

“பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!” இல் ஒரு கருத்து உள்ளது

  1. தமிழக முதல்வரான பிறகு அதற்குக் காரணமான விஜயகாந்தை எப்படி நடத்தினார் என்று தெரிந்தும் இவரை நம்பும் அளவுக்கு இந்தியக் கூட்டணித் தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறீர்களா.

    கோபாலன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.