அறிவியல், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

நீதிபதிகள் அணிந்த குளிர்கண்ணாடிகள்!

நோய்நாடி நோய்முதல்நாடி – 36

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

‘கண்ணாடி’ என்று நாம் பொதுவாகச் சொல்லும் விஷயத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன தெரியுமா? முகம் பார்க்கும் கண்ணாடிகள் – இவற்றில் சில ‘பூதம் காட்டும்’ (நம்மை இல்லீங்கோ!). எங்கள் ஊரில் இருக்கும் சர் விச்வேச்வரையா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் இருக்கும் கண்ணாடிகளை நீங்கள் அவசியம் வந்து பார்க்க வேண்டும். ஒரு வகைக் கண்ணாடிகள் நம்மை பத்து மடங்கு குண்டாகக் காட்டும் (எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!) சில  மிக மிக ஒல்லியாகக் காட்டும் நம்மை. (இதுதாங்க எனக்கு ரொம்ப பிடித்த கண்ணாடி!) சில தூரத்திலிருந்து பார்க்கும்போது வளைந்து நெளிந்து காட்டும். சில நம்மைப் போல பல உருவங்களைக் காட்டும்.

வீட்டு ஜன்னல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், கண்ணாடி பாட்டில்கள், மிகுந்த அளவு வெப்பத்தைத் தாங்கக்கூடிய செராமிக் கண்ணாடிகள் என்று பல வகைகள் உண்டு. நாட்டின் தலைவர்கள் கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவதைப் பார்த்திருக்கிறோம். இவை குண்டு துளைக்காதவை. பேருந்து, சிற்றூந்து முதலிய வாகனங்களில் இருக்கும் கண்ணாடிகள் கண்ணாடியையும், பிளாஸ்டிக்கையும் சான்ட்விச் போல வைத்து தயாரிக்கப்படுவை. விபத்து ஏற்படும்போது உடைந்தாலும் சிதறுவதில்லை. தெர்மோ பிளாஸ்க், சோதனைக் குழாய் போன்றவற்றிலும் கண்ணாடி பயன்படுத்தபடுகிறது.

இவை எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்டவை நாம் கண்களில் அணியும் மூக்குக்கண்ணாடிகள். இவற்றைத் தயாரிக்க மிகவும் சுத்தமான கச்சாப்பொருள் தேவை. இவை விலையுயர்ந்ததும் கூட. இந்தவகைக் கண்ணாடிகள் மைக்ரோஸ்கோப், டெலஸ்கோப், காமிரா லென்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

கூலிங்கிளாஸஸ் என்கிற குளிர் கண்ணாடிகள் முதன்முதலில் எதற்காக அணியப்பட்டன என்ற செய்தி நமக்கு வியப்பைத்தரும். சீன தேசத்து நீதிபதிகள் நியாயாலயத்தில் தங்களது கண்களின் பாவனைகளை மறைக்க புகை வண்ண க்வார்ட்ஸ் கண்ணாடிகளை அணிந்திருந்தார்களாம். 1929 ஆம் ஆண்டில் ஃபாஸ்டர் க்ரான்ட் நிறுவனத்தின் நிறுவனர் சாம் ஃபாஸ்டர் என்பவர் முதல் ஜோடி குளிர் கண்ணாடிகளை அட்லாண்டிக் சிடியில் விற்றார். 1930 முதல் இந்தக் குளிர் கண்ணாடிகளுக்கு அமோக வரவேற்புதான்!

இவற்றின் சரித்திரம் பார்ப்போம்: ரோமானிய மன்னன் நீரோ வாட்போர்வீரர்களின் சண்டையை மரகதக் கற்கள் வழியாக பார்ப்பதை மிகவும் விரும்பினானாம். இந்தக் கற்கள் கண்ணாடி போலவே பயன்படுத்தப்பட்டன,

வெகு காலத்திற்கு முன் பனிப்பிரதேசத்தில் (கனடியன் ஆர்க்டிக் பகுதி)  வசித்தவர்கள் தந்தத்தினால் ஆன ‘கண்ணாடிகளை’ – பார்ப்பதற்கு வசதியாக அந்த தந்தத்தில் சிறு பிளவு ஏற்படுத்தி – பயன்படுத்தி வந்தனர் என்பது இன்னொரு வியப்பான செய்தி. பனிப்பரப்பில் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும் போது தாற்காலிக கண்பார்வை குறைவு ஏற்படும். இவற்றிலிருந்து கண்களைக் காக்க தந்தத்தில் ஆன கண்ணாடிகளை அணிந்து வந்தனர்.

  • 1300 சீன தேசத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள்/வழக்குகள் பற்றிய தங்களது முகபாவனைகளை மறைக்க புகையூட்டப்பட்ட கண்ணாடிகளை அணிய ஆரம்பித்தனர்.
  • 1430 இத்தாலி நாட்டிலிருந்து பார்வைக் குறைபாடுகளை சரி செய்யும் மூக்குக் கண்ணாடிகள் சீனாவில் அறிமுகப்படுத்தப் பட்டனர்.
  • 1700 ஜேம்ஸ் ஆயுச்காப் என்பவர் நீலம்-பச்சை நிறம் சேர்க்கப்பட்ட  கண்ணாடிகள் சில குறிப்பிட்ட பார்வைக் கோளாறுகளை சரி செய்யும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
  • 1929 சாம் ஃபாஸ்டர் கண்ணாடிகள் கடற்கரையில் அணியும் சூரிய வெளிச்சத்திலிருந்து கண்களை காக்கும் குளிர்கண்ணாடிகளுக்கு நியூஜெர்சி அட்லாண்டிக் சிடியில் விற்பனையை துவக்கினார்.
  • 1936 ரே பான் நிறுவனம் எட்வின் எச். லான்ட் போலராய்ட் ஃபில்டர்களை குளிர்கண்ணாடிகளில் பயன்படுத்தத் துவங்கியது.
  • 1960 ஃபாஸ்டர் க்ரான்ட் நிறுவனத்தின் சாதுர்யமான விளம்பரத்தால் குளிர்கண்ணாடிகள் மிகவும் நாகரீகமானதாகவும் ‘சிக்’ வடிவமைப்புடனும்  பிரபலபடுத்தப் பட்டன.
  • 2004 ஓக்லே நிறுவனம் தம் (Thump) என்ற டிஜிடல் ஆடியோ உள்ளமைப்புடன் கூடிய குளிர்கண்ணாடிகளைத் தயாரித்தது.

ஏற்கனவே சொன்னதுபோல முதன் முதலில் குளிர் கண்ணாடிகளின் பயன்பாடு வேறுவிதமாக இருந்தது. மனதில் நாம் நினைப்பதை நம் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் தம்மிடம் வரும் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் தங்களது உணர்வுகளை மறைக்கவே இந்தக் கண்ணாடிகளை பயன்படுத்தினர்.

Pencil -6

20 ஆம் நூற்றாண்டில்தான் இந்தக் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களை காப்பாற்ற பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்ல; விமான ஓட்டிகள் மிக உயரத்தில் பறக்கும்போது வெட்ட வெளியில் இருக்கும் அதிக ஒளியினால் அவர்களது கண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்தக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன. 1930 களில் பாஷ் & லாம்ப் நிறுவனத்தால் இந்தவகைக் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டன. இந்த நிறுவனத்தின் இயற்பியலாளர்கள் மற்றும் கண் மருத்துவர்கள் சேர்ந்து  நிறமாலையில் இருக்கும் மஞ்சள் கலரிலிருந்து ஒளியை கிரகிக்கும்படியான கரும்பச்சை நிற கண்ணாடியை உருவாக்கினர். இரண்டாம் உலகப்போரின் போது விமான ஓட்டிகள் மிகப்பெரிய கண்ணாடிகளை (கண்களை முழுதும் மறைக்கும்படியான) அணிந்திருந்தனர்.

பனிபிரதேசத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கு சிலசமயம் வெவ்வேறு நிறங்களுகிடையே வித்தியாசம் தெரியாமல் போவதும், பார்ப்பதெல்லாம் சிவப்பு நிறமாகத் தெரிவதும் உண்டு. மேலும் பனி வெளிச்சப் பிரதிபலிப்பை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தால், ‘சோலார் ரெடினோபதி’ என்கிற பார்வையிழப்பும் ஏற்படும். இதை சரி செய்ய இயலாது. இதனாலும் வெயிலுக்குப் படுவதுபோல, பனிப்பகுதிகளிலும் குளிர் கண்ணாடிகள் போடுவது அவசியம்.

குளிர் கண்ணாடிகள் வாங்கும்போது அவை நம் முகத்தில் வடிவத்திற்குத் தகுந்தாற்போல இருந்தால் நம் அழகைக் கூட்டும். மிகவும் முக்கியமான விஷயம் நம் கண்களுடன் ஒட்டி எந்தவிதமான வெளிச்சமும் நம் கண்களை தாக்காமல் இருக்கும்படி வாங்கவேண்டும்.

அடுத்த வாரம்…

“நீதிபதிகள் அணிந்த குளிர்கண்ணாடிகள்!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. நானும்கூட எங்கேயோ நீங்க குறிப்பிட்டுள்ள கண்ணாடியில் பார்த்திருக்கிறேன். அப்போது குண்டாக காட்டிய கண்ணாடி பிடித்தது. இப்போது ……… ?

    சாதாரணமாகப் பார்க்கும் அல்லது போட்டுக்கொள்ளும் கண்ணாடிகளைப் பற்றி இவ்வளவு விஷயங்களா என ஆச்சரியமாக உள்ளது. பகிர்விற்கு நன்றிங்க.

yarlpavanan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.