சமையல், சைவ சமையல்

சௌசௌ என்னும் பெங்களூர் கத்தரிக்காய் கூட்டு

ருசி

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

இதில் பலவித கூட்டு, கறி, துவையல்,பஜ்ஜி என்று வகைவகையாகத் தயாரிக்கலாம். அவியல், சாம்பார், தயிர் பச்சடி என்றும் ஜமாய்க்கலாம். இது குளிர் இருக்கும் மலைப்பிரதேசங்களில்  அதிகம் பயிராகிறது.  இந்தக்காயை முதன்முதலில் சீமைக் கத்தரிக்காய் என்றுதான் எங்களுக்குத் தெரியும். அதுவும் பெங்களூரில் அதிகமாக்க் கிடைக்கும். அடுத்து காட்மாண்டுவில் இது அதிகமாக வீட்டிலேயே கொடி படர்ந்து காய்த்துக் கொண்டிருந்தது. இப்பவும் பிள்ளை வீட்டில் இது வளர்த்துக் காய்க்காத வருஷங்களே இல்லை.
இதற்கு நேபாலியில் என்ன பெயர் தெரியுமா ? இஸ்கூல் என்று பெயர். இதிலும் காட்டுவகைமாதிரி மேலெல்லாம் முள் அடர்ந்து ஒருவகை உண்டு. பழுப்பு வெண்மை நிறத்திலும்,   காய்கள் உண்டு. ஒரு முறை கொடி வளர்ந்து விட்டால், குளிர்காலத்தில் காய்ந்து கொடி தரைமட்டம் ஆகி விட்டாலும் வேனிற்காலம் ஆரம்பித்தவுடன் கொடி துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
வேலி ஓரம்,பந்தல், இப்படி கொடிபடர,பூக்க,காய்க்க என்று ஆரம்பித்து விடும். சற்று இனிப்பு ருசியும் இருக்கும். உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்காது. நல்ல நல்ல சத்துக்கள் அடங்கியது. நல்ல முற்றிய காய்களை சேகரித்து வைத்து சீஸன் இல்லாத காலங்களில், தோலை அடர்த்தியாக சீவி எடுத்துவிட்டு,  நல்ல கீரைத்தண்டுகள் சமைப்பதுபோல, தானிய வகைகளுடன் கூட்டு செய்வதும் உண்டு. குளிர்பபிரதேசங்களில் காய்களை இப்படி உபயோகப்படுத்தும் விதம் உண்டு. முற்றிய காய்கள், முளைவிட்டு செடிவளற ஆரம்பித்தால், நட்டுவிட்டால்  கொடி வளரும். இப்படிச் சுலபமான முறையில் பரம்பரைக் கொடி. மூன்று வருஷத்திற்கு ஒரு முறை  கொடியை மறுபடி நட்டால் போதும். இது என் நேபால் அனுபவம்.
P1030040

ப்ளட்பிரஷர்,மலச்சிக்கல், குடல் சம்பந்தமான  தொந்திரவுகளை எல்லாம்  குறைக்கும். பொட்டாஷியம்,கால்ஷிய சத்துக்கள் அடங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதிலும் கூட்டையும், துவையலையும் பார்ப்போம்.
இங்கு மும்பையில் அதிகம் நான் இக்காயைப் பார்க்கவில்லை. மலையாளத்தார் கடையில் பார்த்ததாக மருமகள் வாங்கி வந்தாள். நான் பீர்க்கங்காயும் சேர்த்துக் கூட்டு செய்தேன். புதிய  வேர்க்கடலையும் சேர்த்தேன், மட்டர்தான் பெங்களூரில் சேர்த்துச் செய்வார்கள்.

வேண்டியவைகள்:
சௌசௌ – 2
பச்சை வேர்க்கடலை அல்லது பச்சைப் பட்டாணி – அரை கப்
துவரம் பருப்பும், பயத்தம் பருப்பும் கலந்து – அரை கப் (தனிப்பயத்தம் பருப்பிலும் நன்றாக இருக்கும்)
மஞ்சள் பொடி – சிட்டிகை
வறுத்து அரைக்க
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
அரிசி – அரை டீஸ்பூன்
மிளகாய் – 2  அல்லது மூன்று
சேர்த்து அரைக்க
தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தாளித்துக் கொட்ட
கடுகு,பெருங்காயம், எண்ணெய்.
கொத்தமல்லி. கறிவேப்பிலை.
ருசிக்கு உப்பு.

செய்முறை:
பருப்பை வழக்கம் போல வேகவைத்துக் கொள்ளவும். காயை அலசித்,தோல் நீக்கி, உட் பருப்பையும் களைந்து விட்டு திட்டமான துண்டங்களாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும். வருக்கக் கொடுத்த சாமான்களை, ஒரு ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்து,தேங்காயும்,சீரகமும் சேர்த்து,மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வழக்கமான பாத்திரத்தில் சிறிது தண்ணீரில்,பச்சை வேர்க்கடலையையும்,நறுக்கிய சௌசௌ துண்டங்களையும் வேகவிடவும். அதிக நேரமெடுக்காது. உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.  வெந்த காயில்,பருப்பு,அரைத்த விழுதைக் கரைத்து சேர்த்துக் கொதிக்க வைத்து கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

காரம் அவரவர்கள் இஷ்டம். நல்ல ருசியாக இருக்கும். வாழைத்தண்டு மோர்க்கூட்டு செய்வதுபோலவும் சௌசௌவில் செய்யலாம். கடுகு,மிளகாய் தாளித்துக் கொட்டி,வதக்கி, தேங்காய் சேர்த்துக்,கறியும் செய்யலாம். கூட்டிற்கு  உடன் ருசியுடன் வழங்க ஒரு புளித் துவையல்,ரசம், அப்பளாம் என ருசியுடன் சமையுங்கள்.

கூட்டு
நான் பீர்க்கங்காய் தோலை வீணாக்காமல், துவையல் செய்வதையும் எழுதுகிறேன். வீட்டில் காய்த்த காய். கூட்டில் போட்டது போக  அதன் தோலில் செய்ததிது. அப்புறம் பார்க்கலாமா?
சௌசௌவை நறுக்கும்போது பிசின் போன்ற வஸ்து கையில் ஒட்டுவது போல இருக்கும். அதை நீக்கக் கூட புது வழி . காயை இரண்டாக வெட்டி ,வெட்டிய இரண்டு பாகத்தையும் ஒன்றோடொன்றாக உராய்ந்தால் பால்போன்ற பிசின் வெளியே வந்து விடுகிறது.  இதை என் பெண்ணின் சிநேகிதி,பெங்களூரில் இருப்பவள் சொன்னதாகச் சொன்னாள். இதுவும் ஒரு டிப்ஸ்தானே!

Advertisements

“சௌசௌ என்னும் பெங்களூர் கத்தரிக்காய் கூட்டு” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. சமையல் செய்யும் விதத்துடன், உங்கள் முன்னுரை, நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் எல்லாமே படத்தில் இருக்கும் கூட்டு போல ருசியாக இருக்கிறது. ‘இஸ்கூல்’ என்று சிலர் ஸ்கூலைச் சொல்லுவார்கள். நேபாலில் பெங்களூர் கத்திரிக்காயின் பெயர் இது என்பது புதிய தகவல்.
  பெங்களூர் கத்திரிக்காயின் சரித்திரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தெரியாத பல விஷயங்கள் உங்கள் நேபால் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

  உங்களது சமையல் குறிப்புகளுக்கு நான் தவறாமல் முதலில் வந்துவிடுகிறேன்!

 2. காமாக்ஷிமா,

  பள்ளியை ‘இஸ்கூல்’ என கிண்டலாக சொல்வது உண்டு. அந்தப் பெயரிலேயே ஒரு காயும் இருக்கிறதே. நேபாள் வார்த்தை ஒன்றை சொல்லிக் கொடுத்திட்டீங்க. இங்கும் சீஸன் சமயத்தில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் நீங்க சொல்லியுள்ள மாதிரியே நிறைய வெரைட்டியில் இந்தக்காய் வருகிறது. நானும் வாரத்துக்கு ஒரு காய் வாங்குவேன். ஊருக்கு வந்து சொந்த வீட்டில் செட்டில் ஆகும்போது காமாக்ஷிமாவின் பெயரைச்சொல்லி இந்தக்காயை நட்டு செடி வளர்க்கிறேன்.

  பிசுபிசுப்பு நீங்க சொல்லியுள்ள டிப்ஸும் புதுசா இருக்கு. காய்ந்த மல்லாட்டையை நேற்றே ஊற வச்சிட்டேன். கைவசம் சௌசௌவும் இருக்கு, பீர்க்கங்காயும் இருக்கு. எது கூட்டாகப் போகுதோ அது நான் ‘வாக்’ போய் வந்த பிறகுதான் தெரியும் அம்மா. வித்தியாசமான எழுத்து நடையில் வித்தியாசமான ஒரு கூட்டு ! அன்புடன் சித்ரா.

 3. காமாக்ஷிமா,

  நானும் இந்தக்கூட்டை சௌசௌ வைத்து செய்து, சாப்பிட்டு, பதிவும் போட்டாச்சு. நல்ல சுவையில் சூப்பரா இருந்துச்சுமா. பீர்க்கங்காய் வைத்து இன்னொரு நாள் செய்துகொள்கிறேன். குறிப்புக்கு நன்றிமா. அன்புடன் சித்ரா.

 4. சித்ராக்கா வீட்டுக்கிச்சன்ல இருந்து இங்கே வந்திருக்கேன் காமாக்‌ஷிம்மா! 🙂 கூட்டு நல்லா இருக்கு. சௌசௌ எனக்கு மிகவும் பிடித்த காய்! வாய்ப்புக் கிடைக்கையில் செய்து பார்க்கிறேன்மா.
  வெறுமனே சமையல்குறிப்பு இல்லாம, தொட்டுக்க:) புதுத்தகவல்களுடன் சுவையான பகிர்வு! :))

  1. வாவா.குட்டிப்பெண் விட்டால்தானே வரமுடியும். கூட்டோடு,தொட்டுக்கவும்,ருசிக்கவும் தானே. அன்புடன்

 5. செளசெள கூட்டு ருசியாக இருந்தது. நான் இதே செய்முறையில் தான் செய்வேன். பிசின் எடுப்பது இதே வழிமுறையில் தான் எப்போதும்…:)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.