காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளராது, கல்தான் வளரும்!

காய்கறிகளின் வரலாறு –  8

DSCN0474

வெண்டைக்காய்
ஆசிய,ஆப்பிரிக்க வெப்ப மண்டல மழைப் பொழியும் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறி வெண்டைக்காய். பொதுவாக வழங்கப்படும் ஒக்ரா என்கிற சொல் ஆப்பிரிக்க மூலச் சொல்லிருந்து வந்தது. அதனால் இதை ஆப்பிரிக்கர்களே முதலில் இதை உண்ணத் தொடங்கியிருக்கலாம். இன்று உலகம் முழுவதிலும் இந்தக் காயை உண்கிறார்கள். இந்தியா வெண்டைக்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது. பச்சை நிறத்தில் மட்டுமல்லாது வெளிர் ஊதா நிறத்திலும் வெண்டைக்காய் உற்பத்தியாகிறது. பொதுவாக தக்காளியில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட், சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் என்று அறிந்திருப்போம். வெளியே தெரியாத செய்தி… வெண்டைக்காயில் உள்ள (100கிராமில் 0.05கி)ஆக்ஸாலிக் அமிலம், சமைக்கும்போது கால்சியம் ஆக்ஸலேட்டாக மாறி, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக்கூடியது என்பதுதான் அது. அளவோடு பயன்படுத்தினால் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

வெண்டைக்காய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
வெண்டைக்காயை உடைத்து பார்த்து வாங்க வேண்டும் என்கிற சொலவடை உண்டு. ஆனால் உடைத்து பார்த்து வாங்குவதற்கெல்லாம் இப்போது கடைகளில் அனுமதிப்பதில்லை. இளம் காய்களை கண்டுபிடிக்க ஒன்றிரண்டு காய்களை எடுத்து அழுத்திப் பாருங்கள் உள்ளே அமுங்கி, உள்ளிருக்கும் வெற்றிடத்தை உணர்ந்தால் அது முற்றிய வெண்டைக்காய், சமைக்க ஏற்றதல்ல. காய்களை அழுத்தும்போது வெற்றிடம் எதுவும் இல்லாமல் கனமாக, விதை, சதைப்பகுதி நெருக்கமாக இருப்பதை உணர்ந்தால் அது சமைக்க உகந்த காய். இளம் காய் அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இதுவும் சமைக்க உகந்த வெண்டைக்காயை கண்டுகொள்ள ஒரு வழி.

வெண்டைக்காயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
வெண்டைக்காய் (100கிராம்)ல் நீர்ச்சத்து 90.17கி, கார்போஹைட்ரேட் 7.45கி, புரதம் 2 கி, நார்ச்சத்து 3.2கி, சர்க்கரை 1.48கி, கொழுப்பு 0.19கி போன்ற அத்தியாவசிய சத்துக்களும் வைட்டமின் சி(27%), வைட்டமின் கே(30%) மற்றம் வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்பளக்ஸ்(35%) போன்ற உயிர்ச்சத்துக்களும் கால்சியம்,இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க் போன்ற தனிம சத்துக்களும் சிறிதளவில் உள்ளன.

வெண்டைக்காயில் ஒரு ரெசிபி…

DSCN0753

வெண்டைக்காய் பொரியல்
தேவையானவை:
வெண்டைக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – கொஞ்சம்
கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு
தயிர் – ஒரு மேஜைக்கரண்டி
மிளகு பொடி – ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை:
சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும். வெண்டைக்காயைக் கழுவி சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் போட்டுத் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெண்டைக்காயைப் போட்டுப் பிரட்டி, சிறு தீயில் வதக்கவும். வெண்டைக்காய் கொழ கொழ என்று இருந்தால் தயிரையும் ஊற்றிக் கிளறவும். காய் வதங்கியதும் மிளகு பொடி தூவி இறக்கவும். மழைக்காலத்தில் ரசம், மிளகு சாதம், பொரிச்ச குழம்பு போன்ற மிளகு சேர்ந்த பதார்த்தங்களுக்கு சரியான இணை இந்தப் பொரியல்.

“வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளராது, கல்தான் வளரும்!” இல் ஒரு கருத்து உள்ளது

  1. வெண்டைக்காய் சாப்பிட்டால்
    மூளை வளராது என்பது உண்மைதான்…
    மூளை விருத்திக்கு
    புதிர்க்கணக்குப் போட்டால் நன்று…
    ஆனால்,
    ஒரு பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டால்
    ஒரு முட்டைச் சத்து என்று
    என் அம்மா சொன்னது
    நினைவுக்கு வருகிறதே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.