காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

பரங்கிக்காய் ஏப்படி பாரம்பரியமானது?

காய்கறிகளின் வரலாறு –  7

பரங்கிக்காய்

DSCN1891

பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானையில் பொங்கலிட்டு பரங்கிக்காய், அவரைக்காய் சேர்த்து செய்த கூட்டை படையலிட்டு சூரியனுக்கு படைப்பது தென்னக மக்களால் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையில் பேருக்கு ஏற்றாற்போல் பரங்கிக்காய் பரங்கியர்களால் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட காய். வட அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது பரங்கி. அமெரிக்காவுக்குச் சென்ற ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்கும் அது பரவியது. மழை பொழிவு உள்ள காலநிலைகளில் வளரக்கூடியது என்பதால் இந்தியாவிலும் அது தனக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டது. பரங்கியின் பூர்வீகம் எதுவாக இருந்தாலும் அதில் உள்ள சத்துக்களை குறைத்து மதிப்பிடுவதிற்கில்லை. வைட்டமின் டி தவிர மற்ற எல்லா வைட்டமின்களும் காய்கறிகளில் உள்ள மற்ற சத்துப்பொருள்களும் இதில் குவிந்திருக்கின்றன. அதனால்தான் பரங்கிக்காயை அமெரிக்கர்கள் கொண்டாடுகின்றனர்.

சமைக்க உகந்த பரங்கிக்காய் எது?
இளம் காயும் சமைக்க உகந்தது, பழுத்த பழமும் சமைக்க உகந்தது. பழுத்த பழத்தை சீசன் இல்லாத காலத்தில் பயன்படுத்த சேமித்து வைக்கலாம். இப்படி ஒரு வருடம் வரை பாதுகாக்கலாம் என்பதே இதன் சிறப்பு. இளம் காயின் தோல் தடித்து இல்லாமல் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்தது இளம் மஞ்சள், வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சமைக்கும்போது தோலை சீவிவிட்ட பயன்படுத்த வேண்டும்.

DSCN1989

பரங்கிக்காயில் உள்ள சத்துக்கள்
100கி பரங்கிக்காயில் வைட்டமின் ஏ 53% உள்ளது. கார்போஹைட்ரேட் 6.5கி, புரதம் 1கி, நார்ச்சத்து 0.5கி,சர்க்கரை 2.76கி, கொழுப்பு 0.1கி போன்ற அத்தியாவசிய சத்துக்களும் வைட்டமின் சி,வைட்டமின் இ,வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உயிர்ச்சத்துக்களும் கால்சியம்,இரும்பு, பொட்டாசியம், சோடியம்,மக்னீசியம்,மாங்கனீஸ்,பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜின்க் போன்ற தனிம சத்துக்களும் உள்ளன.

DSCN2331

பரங்கிக்காயில் ஒரு சுவையான ரெசிபி இதோ…

பரங்கிக்காய் சட்னி
தேவையானவை:
பரங்கிக்காய் துண்டுகள் – 2 கிண்ணம்
காய்ந்த மிளகாய் – 6
பெருங்காயத்தூள் – ஒரு தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
உளுத்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டி

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடவும். காய்ந்ததும், மிளகாயைப் போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு உளுத்தம் பருப்பைப் போட்டுச் சிவக்க வறுத்து எடுக்கவும். அடுத்து பரங்கிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கி எடுக்கவும். பிறகு பரங்கிக்காய் துண்டுகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், புளி, பாதியளவு உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு எல்லாம் சேர்த்து அரைக்கவும். கடைசியில் எடுத்து வைத்திருக்கும் மீதி உளுத்தம் பருப்பையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.