சினிமா, நடிகர்கள், விஜய் சேதுபதி

எனக்கு நடிக்கவே வராது! விஜய் சேதுபதி ஓபன் டாக்

Thegidi Audio Launch (32)

பண்ணையாரும் பத்மினியும் ரிலீஸ் பிஸியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியிடன் ஒரு மினி பேட்டியைக் கேட்டோம். இவ்வளவு பெரிய ஸ்டார் ஆவோம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா என்று ஆரம்பித்தோம்…
’’சொந்த ஊர் ராஜபாளையம் என்றாலும் படித்தது எல்லாமே சென்னைதான். 2004ல் தான் சினிமா துறைக்கு வந்தேன். ஒரு சினிமா கம்பெனியில் அக்கவுண்டன்ட் வேலைக்குத்தான் சேர்ந்தேன். ஆனால் ஹீரோவாக நடிப்பேன். இவ்வளவு பெரிய மாஸ் கிடைக்கும். தமிழக ரசிகர்கள் என் முகத்தை ஏற்றுக்கொள்வார்கள் என கனவில் கூட நினைத்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு சுத்தமா நடிக்கவே வராது. நடிக்கத் தெரியாமல் நடிகனான ஒரே நடிகன் நானாகத்தான் இருக்கும். வெண்ணிலா கபடிகுழு, லீ, புதுப்பேட்டை, நான் மகான் அல்ல இப்படி நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தேன்.  எனது முதல்படம் வருணம். ஆனால் தென்மேற்கு பருவக் காற்று தான் எனக்கு ஹீரோ இமேஜை பெற்றுத்தந்தது. இந்தப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு முழுக்க தூக்கமே வரலை. முதல் ஷோவை ஆடியன்ஸோட சேர்ந்து நானும் கைதட்டி ரசித்துப் பார்த்தேன். நமக்கும் இவ்வளவு பேரு கைதட்டுறாங்கண்ணா, கேரியரை விட்டுடக்கூடாதுன்னு முடிவு பண்ணி தீவிரமா சான்ஸ் தேடினேன். 7 வருஷம் சினிமாவில் சான்ஸ் தேடி ரொம்ப கஷ்டப்பட்டேன். அதற்கான பலனை இப்ப வட்டியும், முதலுமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லா படங்களும் ஹிட் ஆனதற்கு காரணம், நான் கிடையாது டைரக்டர்கள் தான். அவர்கள் நடிக்கச் சொன்னதை நான் செஞ்சேன்.’’
பண்ணையாரும் பத்மினியும் எப்படிப்பட்ட படம்?
’’காமெடி கலந்த ஒரு கிராம கலாச்சாரத்தின் கதை. பத்மினி என்கிற பழைய மாடல் காருக்கு முக்கியமான ரோல். நெகிழ்ச்சி, உறவு, பாசம், சென்டிமெண்ட் என எல்லாத்துக்கும், எல்லா விதத்திலும் தீனி போடும் இந்தப் படம்! ’’

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.