இந்த வாரம் பண்ணையாரும் பத்மினியும், உ, புலிவால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை. பாடல்கள் ஹிட் ஆகி உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தம்பி ராமையா மற்றும் புதுமுக நடிகர் நடித்திருக்கும் உ நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது.
ராதிகாவின் ராடன் மீடியாவின் இணை தயாரிப்பில் விமல், பிரசன்னா, ஓவியா, இனியா,சூரி, தம்பிராமையா நடித்திருக்கும் புலிவால் நகைச்சுவையுடன் த்ரில்லர் கலந்த படம்.