சினிமா, நடிகர்கள், நாம் தமிழர் கட்சி

கெட்டவனாக நடித்து வசவுகளைக் கூட வாங்கத் தயார்- புதுநடிகர் வெற்றிக் குமரன்!

திரையுலக ஆசை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். பாசாங்காக திரையுலகைத் திட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கும்.
அந்த அளவுக்கு வசீகரத் தன்மை கொண்ட விஞ்ஞான கலைச் சாதனம்தான் சினிமா.
சினிமாவைத் தீண்டத் தகாதது என்று பேசியும் எழுதியும் வந்த அறிவுஜீவிகள் பலரும் இன்று திரைநுழைவு செய்துவருகிறார்கள். சினிமாவுடன் ரகசிய சினேகிதம் கொண்டிருக்கிறார்கள்.
பலரும் நுழைய விரும்பும் காரணம் புகழ்வரவு பணம் வரவு போன்றவைதான்.
ஆனால் வளர்ந்து வரும் நடிகர் வெற்றிக் குமரன் விரும்புவது வேறு விதமானது.தன்னை வளப்படுத்த என்பதைவிட தன் பணியைப் பலப்படுத்தவே இவர் சினிமாவுக்கு வந்துள்ளார்.

Actor Vetrikkumaran stills (14)
யார் இந்த நடிகர் வெற்றிக்குமரன்?
ராமநாதபுரம் மண்ணைச் சேர்ந்தவர். ‘நாகராஜ சோழன்’ படத்தில் நடித்துள்ளார். இப்போது ‘பிரமுகர்’ என்றொரு படம் நடித்து முடித்துள்ளார். ஆர். கே. செல்வமணி இயக்கும் ‘கண்ணிவெடி’ படத்தில் முக்கியமான வேடம்.சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
வெற்றிக்குமரன் ஊர்தோறும் சுற்றுப் பயணம் செய்து செந்தமிழன் சீமானின் கரத்தை வலுப்படுத்தி வருபவர். ஊர்சுற்றவும் களப் பணியாற்றவுமே நேரம் சரியாக இருக்கும். இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று நாம் நினைக்க முடியும்.
அவரே அதற்குப் பதில் சொல்கிறார். ” நான் அண்ணன் சீமானோடு மக்கள் பணியாற்றி வருகிறேன். வருமானத்துக்கு கட்டடம் கட்டும் கட்டுமானத் தொழிலையும் செய்து வருகிறேன். நான் அண்ணனுடன் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். அவரும் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசிவருகிறார். தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறார்.அவர் கிராமப்புறங்களுக்குச் செல்கிற போது மக்கள் அவரை ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் நடித்த நடிகராகவே அடையாளம் கொள்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள்..
இவ்வளவு ஊர்களுக்கும் தானே பயணம் செய்து மேடைகளில் பேசி அவர் அடைந்ததை விட ஒரே படத்தின் மூலம் அதிகமான புகழை அடைந்து இருக்கிறார்.
அதிலிருந்து சினிமா என்கிற ஊடகத்தின் வலிமையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்த சினிமாவிலிருந்து தானே எம்.ஜி.ஆர். என்கிற மாபெரும் தலைவர் வந்தார்?
எனக்கு கலைத்தாகம் என்றெல்லாம் எதுவுமில்லை. சினிமா லட்சியம் என்றெல்லாம் எதுவுமில்லை. இப்படி இருந்த என்னை அண்ணன் சீனுராமசாமி தன் ‘தென்மேற்கு பருவக் காற்று’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தார். அதற்குக் கிடைத்த அடையாளம் சினிமாவின் வலிமையை எனக்கு உணர்த்தியது”. என்கிறார்.
“அரசியல் களத்தில் நிற்கிறோம். மக்கள் முன்னர் நமது முகம் அறிமுகமாகியிருப்பது நமக்கு உதவும் என நம்புகிறேன். நம் பணியை சுலபமாக்கும் என நம்புகிறேன். இதை உணர்ந்துதான் நடிக்க விரும்பினேன்;முடிவெடுத்தேன்.
நண்பர்கள், அன்பு சகோதரர்கள் கேட்டபடி அவர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றி வருகிறேன். சிலவற்றில் அழுத்தமான பாத்திரங்களும் உண்டு. “என்கிற வெற்றிக் குமரனுக்கு ஆர். கே. செல்வமணி இயக்கி நடிக்கும் ‘கண்ணிவெடி’ படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடமாம்.ஒரு காட்சியில் போராளியாக நடிக்கும் செல்வமணியை அடிப்பது போல் கூட இவருக்குக் காட்சி உண்டாம் .
பொதுவாக தமிழார்வலர்கள், தமிழ் விரும்பிகள் திரைப்படத்தை விமர்சிப்பதும், தீண்டத் தகாத ஒன்றாக பார்க்கும் போக்கும் உள்ளதே..? என்று கேட்ட போது.
“இது மிகவும் தவறானது. திரைப்படம் வலிமையான ஊடகம். தணிக்கையில்லாமல் ஒரு படமெடுக்க அனுமதித்தால் திராவிடநாடு கோரிக்கையை வென்றெடுக்க முடியும்” என்று அண்ணா கூறியதாகப் பார்க்கிறோம்.
அந்த அடிப்படையில்தான் நான் நடிக்க வந்துள்ளேன். “என்கிற வெற்றிக் குமரனுக்கு தான் நடிக்கும் படத்தின் நோக்கம் முக்கியம் என்கிறார். அது என்ன நோக்கம்?
“ஒரு படம் நல்ல நோக்கத்துக்கு நல்ல கருத்தைப் பரப்ப எடுக்கப் படுமானால் அதில் கெட்டவனாக நடித்துக் கூட வசவுகளை வாங்க தயார். நோக்கம் சரியில்லாத படத்தில் கதாநாயகன் வாய்ப்பு வந்தால் கூட நடிக்க மாட்டேன். ” என்கிறார் தெளிவாக.
முழுமையான கருத்துரிமையோடு படம் வந்தால் சமூக மாற்றம் நிகழ்த்த முடியும் என நம்பும் வெற்றிக் குமரன்., வாய்ப்பு அமையுமானால் வருங்காலத்தில் அப்படிப்பட்ட படத்தை தயாரிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.