அரசியல், இலங்கை தமிழர், சினிமா

உலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் கெலம் மெக்ரே ‘பாதுகாப்பு வளையம்-இலங்கையின் கொலைக்களம்’ (killing field) என்ற ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து நடக்க இருந்த ஐ.நா. மனித உரிமை அவையில், “இந்தியா என்ன செய்யப் போகிறது?” என்ற கேள்வியை கெலம் மெக்ரே எழுப்பினார். இந்தக் கேள்விக்கு விடை காண சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் எட்டாம் தேதி காலவரையற்ற உண்ணா விரதத்தைத் தொடங்கினர். இவர்கள் கொளுத்திப் போட்ட நெருப்பு தமிழக மாணவர்களிடம் பற்றிக் கொண்டது. அரசு மற்றும் சட்டக் கல்லூரிகளைத் தவிர, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்கள் போராட்டத்தின் வீச்சை கண்டு அரசியல் கட்சிகள் அதிர்ந்து போயின. அதன் விளைவாக மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியது. “தமிழீழத்துக்குப் பொது வாக்கெடுப்பு; இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வர வேண்டும்” என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி நிற்க வைத்து விட்டு ஈழத்தமிழர்களுக்கு உண்மையாக குரல் கொடுத்த தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டம் அறப்போர் என்ற ஆவணப்படமாக உருவானது.

docu_01

செங்கொடி மீடியா ஓர்க்ஸ் சி.கபிலன் தயாரிப்பில் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தை கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி இயக்குநர் அமீர் வெளியிட்டார். ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய மொழி சப் டைட்டிலில்  உருவான அறப்போர் ஆவணப்படத்தை ‘killing field’s ஆவணப்பட இயக்குநர் (சேனல் 4) கலெம் மெக்ரே பார்த்து பாராட்டினார். இந்தப் பாராட்டு, இப் படக்குழுவினருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அத்துடன், அறப்போர் சுவிட்ஸர்லாந்து நாட்டில் இரண்டு முறை திரையிடப்பட்டது.

இப்போது, கிரீஸ் நாட்டில் நடைபெறும் 16வது சர்வதேச ஆவணப்பட விழாவில் (http://www.filmfestival.gr) திரையிடுவதற்கு அறப்போர் ஆவணப்படம் தேர்வாகி உள்ளது.  அதன்படி, வருகிற மார்ச் மாதம் 16-22 ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடப்படும். இது தமிழக மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மேலும் ஓர் அங்கீகாரம்.

உலகம் முழுவதும் இருந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் படைப்பாளிகளின் பார்வைக்கு ஈழத்தமிழகளுக்கு நேர்ந்த துயரத்தைக் கொண்டு செல்ல கிடைத்த அரிய வாய்ப்பு இது. இதன் மூலமாக இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையை சர்வதேச சமூகத்துக்கு அம்பலப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை அறப்போர் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.