உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், கீரைகள்

நச்சுக்கூடாரமாகும் உடல்!

உடல் மேம்பட

நம் உடலில் நச்சுக்களாக சேரும் வேதிப்பொருட்களே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். இன்றைய வாழ்க்கைச் சூழலே நோய் உண்டாக்கும் நச்சுக்களை நம் உடலில் நம்மை அறியாமல் சேர்த்துவிடுகின்றன. எந்தெந்த வழிகளில் நம் உடலில் நச்சுக்கள் சேருகின்றன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

1. காய்கறிகள், கீரைகள், பழங்கள்
மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக கீரைகள், பழங்கள், காய்கறிகள் மீது தெளிக்கப்படும் வேதிப்பொருட்களை, நாம் அவற்றுடன் சேர்ந்து உட்கொள்ளும்போது மலட்டுத்தன்மை முதல் புற்றுநோய் வரை பல குறைபாடுகளை நமக்கு ஏற்படுத்துகின்றன.
2. குடிநீர்
குடிக்கும் நீரில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களாலும், சில இடங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் கலந்திருக்கும் அதிகப்படியான உலோகங்களாலும் சிறுநீரகம் மோசமாக பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
3.காற்றுமாசுபடுதல்
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களில்கூட இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுபட்ட புகையினை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கபடும் ஆபத்து இருக்கிறது.
DSC_1526

4. பால்
புனிதமாக கருதப்படும் பாலில்கூட அதிகப்படியான வேதிப்பொருட்கள் நமக்கு பலவிதமான ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. பால் அதிகமாக சுரக்க வேண்டும் என்பதற்காக மாடுகளுக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகளாலும் பாக்கெட் பால் தயாரிப்பில் அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களாலும் சிறு வயதிலேயே வயது வருவது, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற பிரச்னையை ஏற்படுத்துகின்றன.
5. மீன்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த புரோட்டீன் உணவாக பரிந்துரைக்கப்படும் மீன்களில்கூட நச்சுக்கள் சேர்ந்து விடுகின்றன. தொழிற்சாலை கழிவுகள் குறிப்பாக, பாதரசம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் கடல் ஓரங்களில், குளம், குட்டை, ஏரிகளில் கலக்கின்றன. இந்த இடங்களில் உள்ள மீன்களிலும் இந்த நச்சுக்கள் சேர்ந்துவிடுகின்றன. இவற்றை உட்கொள்வதன் மூலம் நமது உடலிலும் அது சேர்ந்து விடுகிநது. இவற்றின் மூலம் தொல் நோய்கள் முதற்கொண்டு புற்றுநோய் வரை நமக்கு உண்டாகிறது.
6. கோழி இறைச்சி
பிராய்லர் கோழிகளுக்கு எடை கூடுவதற்காகப் போடப்படும் வேதிமருந்துகள், அவற்றை உட்கொள்ளும் நம் உடலிலும் சேர்ந்து விடுகின்றன.மூட்டுவலி, புற்றுநோய் போன்றவை இதன் மூலம் ஏற்படுகின்றன.
7. தவறான உணவுப்பழக்கம்
நாம் உண்ணும் உணவில் 20 சதவிகிதம்தான் அமிலத் தன்மை இருக்க வேண்டும். ஆனால் நாம் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உண்ணுகிறோம். இந்த அதிகமாக அமிலத்தன்மை நம் உடலில் நச்சாக மாறி பலவித உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
8. உடல் இயக்கம் குறைவது
உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதுதான் உடலில் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்குக் காரணம். உடல் இயக்கம் குறைந்து போவது இதற்கு முக்கிய காரணம். உடலை இயங்க வைக்கும் வேலைகளை செய்யாதவர்கள் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் சரியாக கிடைக்காமல் போனாலும் நம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து நோய்களின் கூடாரமாகிவிடும்.

சரி… இப்படி உங்கள் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை நீக்குவது எப்படி? அடுத்த பதிவில்

“நச்சுக்கூடாரமாகும் உடல்!” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. எதைத்தான் சாப்பிடுவது என்ற குழப்பம்தான் மிஞ்சுகிறது நமது உடலே ஓர் இராசயனக் கூடமாக மாறிவிடும் என நினைக்கிறேன். நல்ல தகவல்கள் பகிர்வுகு நன்றி

  2. விஜயா சொல்வதுபோல சில சமயம் குழப்பம் தான். சிலர் அரிசியையே கண்ணில் பார்க்காதீர்கள் என்கிறார்கள்; சிலர் கோதுமை நம் உணவு அல்ல என்கிறார்கள். எதைத்தான் சாப்பிடுவது?
    நானும் தொடர்ந்து படிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.