காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ரொட்டி வகைகள்

சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!

சீசன் சமையல்

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

பட்டாணி  கிடைக்கும் சீஸன் இது. இம்மாதங்களில் கிடைக்கும் பட்டாணி மிகவும் ருசியானதாகவும்  இருக்கும். எது செய்தாலும் பார்க்கப் பச்சைப் பசேல் என்று அழகாகவும் இருக்கும்.
பரோட்டா பட்டாணியில் செய்வதற்கு ஃப்ரோஸன் பட்டாணி உபயோகப்படுத்தியும் செய்யலாம். பூரண முறையில் செய்யப்படும் யாவைக்கும்  சற்று வேலை அதிகம்தான். பழக்கப்பட்டு விட்டால் எதுவுமே ப்ரமாதமில்லை. டிபனில் வைத்து அனுப்புவதற்கு மிகவும் நல்லது. காய்ந்து போகாது. மெத்தென்ற போளி போன்ற தயாரிப்பு. ஊறுகாய்,தயிர் என எதையும் ஜோடி சேர்த்துச் சாப்பிடலாம். பட்டாணி பூரணம் ஒழுங்காக தயாரித்து வைத்துக்கொண்டால் செய்வது எளிது. ஃப்ரிஜ் முதலான வசதிகள் இருக்கும் போது,  செய்வது ஒன்றும் பிரமாதமில்லை. மலிவாகவும் கிடைக்கும்போது செய்து பார்த்துச் சுவைக்கலாமில்லையா? நான் உங்களை விடவில்லை .செய்து பார்க்க வந்து விடுங்கள். ஆரம்பிக்கலாமா?

வேண்டியவைகள்:
மாவு – ஒன்றரை கப் (கோதுமை மாவு அல்லது கோதுமை மாவுடன் மைதா கலந்தும் தயாரிக்கலாம்.)
உரித்த பட்டாணி – ஒன்றரை கப்
பச்சைமிளகாய் – 2
சாம்பார் வெங்காயம் – சின்னதாக 2 (தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.)
சீரகப்பொடி, தனியாப் பொடி, மாங்காய்ப் பொடி  வகைக்கு -அரை டீஸ்பூன்
உப்பு – ருசிக்கு
மாவில் விட்டுப் பிசைய, தாளித்துக்கொட்ட என பொதுவாக எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள்.
ரொட்டி இட மேல்மாவு கொஞ்சம்.
பரோட்டா செய்வதற்கு, எண்ணெயோ,நெய்யோ வேண்டிய அளவு.

செய்முறை:
நல்ல பட்டாணியாக வாங்கி உரித்து வைத்துக் கொள்ளுங்கள். உரித்த பட்டாணியில்,கொதிக்கும் தண்ணீரை விட்டு மூடி வைக்கிறோம். மாவை நன்றாக சலித்துக் கொண்டு,உப்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, திட்டமாகத் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசைகிறோம். ரொட்டி மாவு பதம்தான். நன்றாக ,மென்மையாகப் பிசைந்து ஒரு பாத்திரத்தில் வைத்து ஊற விடுகிறோம்.

தண்ணீர் ஆற ஆரம்பித்தவுடன் தண்ணீரை ஒட்ட வடிக்கட்டி பட்டாணியை வடிதட்டில் கொட்டி வைக்கிறோம். இத்துடன் மிளகாய், வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது கெட்டியாக அரைத்துக் கொள்கிறோம். பட்டாணியின் ஈரப் பசையிலேயே நன்றாக அரையும். தண்ணீர் வேண்டாம். அரைத்த விழுதை எடுத்து வைத்துக்கொண்டு,  ஒரு அடிகனமான வாணலியிலோ, நான் ஸ்டிக் பேனிலோ ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.

பட்டாணி பூரணம்
நிதான தீயில் கிளறினால் விழுது இறுகி வரும். பொடிகள்,உப்பு முதலானவைகளைச் சேர்த்துக் கிளறவும். கையில் ஒட்டாத பதத்தில்,  பட்டாணி பூரணத்தைக் கிளறி இறக்கவும்.
மாவும் ரெடி.பூரணமும் ரெடி. மாவு பிசைந்திருப்பதைச் சீராகப் பிரித்து உருட்டிக் கொள்ளவும். அதே முறையில் பூரணத்தையும், பிரித்து உருட்டி வைக்கவும். மேல் மாவு தயாராக இருக்கட்டும். ஒரு மாவு உருண்டையை மாவில் பிரட்டி சின்ன வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் இலேசாக  துளி எண்ணெயைத் தடவவும். பூரண உருண்டையைச் சற்றுத் தட்டையாகச் செய்து வட்டத்தின் நடுவினில் வைக்கவும்.

P1030035

வட்டத்தின் விளிம்பினால் பூரணம் தெரியாமல் இழுத்து மூடவும். திரும்பவும், மாவில் உருண்டைகளைத் தோய்த்து,  போளிகள் போல அப்பளங்களாக இடவும். இரண்டு மூன்று முறை  மாவில் தோய்த்து இடவேண்டி வரும். இட்ட பரோட்டாவை  அடுப்பில் நான் ஸ்டிக் தோசைக் கல்லைக் காயவைத்து பரோட்டாவைப் போடவும். லேசாக பரோட்டாவின் மீது ஸ்பூனின் அடிபாகத்தினால் எண்ணெயைத் தடவவும். தீ நிதானமாக இருக்கட்டும். ஈரப்பதம் மேலே குறையும் போதே பரோட்டாவைத் திருப்பவும். சற்று அழுத்தம் கொடுக்கவும் . லேசாக தோசைத் திருப்பியால். பரோட்டா உப்பிக் கொண்டு மேலெழும்.

P1030037
இந்தப் பக்கமும் எண்ணெயோ,நெய்யோ விடவும். இரண்டு பக்கமும் சற்றுச் சிவக்க விட்டே எடுக்கவும். மடித்தபடியோ,அல்லது அப்படியேயாகவோ  மீதியைச் செய்தெடுக்கவும்.

P1030039

ஊறுகாய், தயிர், கூட்டுகள் என சாப்பிட ருசியாக இருக்கும். ஒரு மாறுதல் வேண்டாமா?  செய்யுங்கள்.

“சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. பட்டாணியிலேயே உப்பு காரம் சேர்த்து குக்கரில் வைத்து விடுவேன் நன்றாக வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதையே மாவில் போட்டு பிசைந்து சப்பாத்தி செய்துவிடுவேன் நான். உங்களது இன்னும் நன்றாக இருக்கும்போல் தோன்றுகிறது பண்ணீப்பார்க்கிறேன் நன்றி அம்மா

    1. உங்கள் முறையும் நன்றாக இருக்கிறது. ஸ்டஃப் செய்து செய்தால் இதன் ருசி வேறுமாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றிம்மா. அன்புடன்

  2. அம்மா நீங்கள் கொடுத்திருக்கும் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை, படித்த எல்லாவற்றையும் உடன் பண்ணி பார்த்த்துவிடுவேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.