கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன், காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

கத்தரிக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  4

கத்தரிக்காய்

DSCN0966
வழுதுணை என இலக்கியங்களில் சுட்டப்படும் கத்தாரிக்காய் தென்னிந்திய பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. வழுதுணை என்ற மூலப்பெயரை அடிப்படையாகக் கொண்டே திராவிட மொழிகள் அனைத்திலும் அழைக்கப்படுகிறது. அதோடு சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகளிலும் கத்தரிக்காயை குறிக்கும் சொல்லும் இந்த சொல்லிருந்து பெறப்பட்டதே.தற்போது புழக்கத்தில் இருக்கும் கத்தரிக்காய் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது என்கிற விவரங்கள் பல்கலைக்கழக அகராதிகளில் இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளில் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வங்காய,வ(ப)தணேகாய், வழுதுணங்கா என்ற சொற்களே இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன என்பது யோசிக்கத்தக்கது.
DSCN0455

கருநீலம், இளம் பச்சை, வெள்ளை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீள் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன. சில வகைகளில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காய் தோல், சதைப்பகுதி, விதைப்பகுதி என முற்றாத கத்தரிக்காயின் அனைத்து பகுதிகளுமே உண்ணப் பயன்படுகின்றன. பழுத்த கத்தரிக்காய்களை வற்றலாக்கி பயன்படுத்தும் பழக்கமும் உண்டு.

எது சமையலுக்கு உகந்த கத்தரிக்காய்?
கத்தரிக்காயின் காம்பு, பச்சை நிறத்தில் காயுடன் ஒட்டி படர்ந்திருந்தால் அது சமைக்க உகந்த இளம் கத்தரிக்காய். முற்றிய காய்களில் விதைப்பகுதி அதிகமாக இருக்கும், உண்ணும் பகுதி குறைவாக இருக்கும். காம்பு வெளிறிய நிறத்தில் காயை விட்டு பிரிந்த நிலையில் இருந்தால் அந்தக் காய் முற்றிய காய்.

த்தரிக்காயில் உள்ள சத்துக்கள்
கத்தரிக்காயி(100கிராம் அளவில்)ல் அடங்கியுள்ள சத்துக்கள்…கார்போஹைட்ரேட் 5.88கி, புரதம் 0.98 கி, நார்ச்சத்து 3 கி ,கொழுப்பு 0.18கி,சர்க்கரை 3.53கி அளவில் அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜின்க், மக்னீஷியம் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் இ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் உண்டு.

கத்தரிக்காயில் ஒரு ரெசிபி

கத்திரி சம்பல்
தேவையானவை:
கத்திரிக்காய் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய்- 10
பூண்டு – 10 பல்
சர்க்கரை – அரை தேக்கரண்டி
வினிகர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஈர்க்கு

செய்முறை:

வெங்காயம், கத்திரிக்காய்களை நீளவாக்கில் சற்று மெல்லியதாக நறுக்குங்கள். மிளகாயை சூடான நீரில் ஊறவையுங்கள். பத்து நிமிடம் ஊறிய பிறகு, தோல் உரித்த பூண்டுடன் சேர்த்து மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய கத்திரிக் காய்களை, கொஞ்சம் கொஞ்ச மாகப் போட்டு பொரித்தெடுத்து தனியாக வையுங்கள்.மீண்டும் கடாயில் எண்ணெயைக் காயவைத்து மிளகாய்-பூண்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போக வதங்கிய பின், வெங்காயம், சர்க்கரை, உப்பு, வினிகர் சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். பிறகு, ஏற்கெனவே பொரித்து வைத்திருக்கும் கத்திரிக்காய்களைச் சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலை தூவி இறக்குங்கள்.

DSCN1873

தொடர்புடைய சுட்டிகள்

வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்

எளிய உணவுகள் – கத்திரிக்காய் சாதம்

Advertisements

“கத்தரிக்காயின் வரலாறு ரெசிபியுடன்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
    முரமுரென வேயினித்த மோரும் – திறமுடனே
    புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
    எல்லா உலகும் பெறும். 35

    புல்வேளூரில் வாழ்ந்த பூதன் ஔவையைப் பாராட்டி விருந்தளித்தான். அந்த விருந்து இந்த உலகையே பரிசாக நல்கியதற்கு இணையாக மதிக்கத்தக்கது. (வழுதுணங்காய் = கத்தரிக்காய்)

    ஈழத்தில் கத்தரிக்காய் சம்பல், தேவையானவை வெங்காயம்,பச்சைமிளகாய்,செத்தல் மிளகாய்,உப்பு, பழப்புளி அல்லது தேசிக்காய்.
    கத்தரிகாயையும் செத்தல் மிளகாயையும் மாத்திரம் தணலில் சுடுவார்கள்.
    மிக இலகுவான செய்முறையும், எந்த விதமான எண்ணைச் சேர்மானமும் இல்லாத , உடன் தயாரிக்கக் கூடிய ,சுவைமிக்கது.
    ஔவையார் சொன்ன வாட்டல் இதுவென நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.