அவரைக்காய், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

அவரைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  3

DSCN1913
வயல் அவரைக்காய் (மொச்சை)

அவரைக்காய்

இந்தியா போன்ற தெற்காசிய காலநிலையில் வளரக்கூடிய கொடி வகை தாவரம் அவரை. விவசாயம் பழகிய காலத்திலிருந்தே இதன் காய்களை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இலக்கியங்களிலும் அதற்கான சான்றுகள் உண்டு. அவரைக்காயில் ஏராளமான வகைகள் உண்டு. சில வகைகளை இளம் காய்களாகவே பறித்து சமையலுக்கு பயன்படுத்துகிறோம். அடர் பச்சை, இளம் பச்சை, இளஞ்சிவப்பு என நிறங்களில் பொரியல் அவரைக்காய்கள் உண்டு. சில வகைகள் காய்கள் முற்றி பழுத்து காய்ந்ததும் அதை உறித்து உள்ளிருக்கும் கொட்டைகளை எடுத்து சமைக்கப் பயன்படுத்துகிறோம். விளைச்சல் இல்லாத காலத்திற்காக இப்படியொரு சேமிக்கும் பழக்கம். இந்தக் காலக்கட்டம் எல்லா நேரங்களிலும் அவரைக்காய் விளைவதை சாத்தியமாக்கியிருக்கிறது.

சமைப்பதற்கு உகந்த அவரைக்காயை தேர்ந்தெடுப்பது எப்படி?
பொரியல் அவரைக்காய் தட்டையாக அழுத்திப் பார்க்கும்போது விதைகள் தட்டுப்படாமல் இருக்க வேண்டும். அதுதான் இளம்காய் பொரியல் செய்வதற்கு உகந்ததாக இது இருக்கும். மொச்சைக்காய் எனப்படும் அவரைக்காய், கொட்டைகள் முற்றியதாக பார்த்தாலே உள்ளிருக்கும் கொட்டைகள் தெரியும்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் கொட்டைகள் சமையலுக்கு உபயோகமளிக்கும்.

DSCN1905

அவரைக்காயில் உள்ள சத்துக்கள்
100கிராம் அவரைக்காயில் உள்ள சத்துக்கள் நீர்ச்சத்து 86.90கி, கார்போஹைட்ரேட்டு 9.2கி ,புரதம் 2.95கி, கொழுப்பு 0.27கி. இவை தவிர, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜின்க், மக்னீஷியம் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உயிர்சத்துக்களும் அடங்கியுள்ளன.

அவரைக்காயில் ஒரு ரெசிபி…

DSCN1999

அவரைக்காய் கூட்டு
தேவையானவை:
பொரியல் அவரைக்காய் – ஒரு கிண்ணம்
துவரம்பருப்பு – அரை கிண்ணம்
வறுத்த கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2.
செய்முறை:
பொரியல் அவரைக்காய்களை அலசி பொடியாக அரிந்து, சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும். பிறகு, துவரம்பருப்பை வேகவைத்து அதில் சேர்க்கவும். தேங்காய்  துருவல், வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் எல்லாவற்றையும் அரைத்து, அதில் சேர்க்கவும். பிறகு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.

1

மொச்சையில் ஒரு பாரம்பரிய ரெசிபிக்கு இங்கே சொடுக்கவும் இதுக்கு பேளே சாரு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.