காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பட்டாணி வரலாறும் ரெசிபியும்

பச்சை பட்டாணியின் வரலாறு ரெசிபியுடன்!

காய்கறிகளின் வரலாறு –  1

பச்சை பட்டாணி

DSCN1819

மனிதன் பயிரிட ஆரம்பித்த ஆதிகால பயிர்களில் ஒன்று பட்டாணிச்செடி. நியோ லித்திக் காலத்திலிருந்தே பட்டாணியை மனிதர்கள் உணவாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பழங்கால புதைப்பொருட்களில் கிடைத்திருக்கின்றன. துருக்கி, ஜோர்டான்,சிரியா போன்ற வட மத்திய நாடுகளே இதன் பூர்விகம். அந்தப் பகுதிகளிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு பட்டாணி சென்றது. 16ம் நூற்றாண்டில் வசதிபடைத்த ஐரோப்பியர்களின் உணவுப்பொருளாக புகழ்பெற்றது பச்சைபட்டாணி. ஐரோப்பியர்களின் வருகையின்போதே இது ஐரோப்பிய காலநிலையை ஒத்த இந்தியப் பகுதிகளில் பயிரடப்பட்டு அறிமுகமானது. நன்கு வளர்ந்து முற்றிய காயிலிருந்து கிடைக்கும் கொட்டைகளே சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற கொட்டை வகைகளைப் போன்றே விளைச்சல் இல்லாத காலத்திற்கு பயன்படுத்த உலரவைத்து சேமிக்கப்படுகிறது பட்டாணி. சமைத்தும் சமைக்காமல் பச்சைபட்டாணி உண்ணக்கூடியது. வட இந்தியர்களின் உணவில் பச்சைபட்டாணி அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

DSCN1830

பச்சை பட்டாணியை பார்த்து வாங்குவது எப்படி?

காய்கறிகளில் முற்றாத இளம்காய்களே சிறந்தவை. ஆனால் பச்சை பட்டாணிகாயைப் பொறுத்தவரை, நன்றாக முற்றிய விதைகள் பெரிதாகத் தெரியும் காயே சமைக்க உகந்தது. இதில்தான் நன்கு வளர்ந்த கொட்டைகள் இருக்கும். பட்டாணிகாய்களை அழுத்திப் பார்க்கும்போது பொசுக்கென்று அமுங்கக்கூடாது. விதைகள் கையில் தட்டுப்பட வேண்டும். வெளிர்ந்த பச்சை நிற காய்களே முற்றியவை, கொட்டைகள் பெரிதாக இருக்கும் இவையே சமைக்க ஏற்றவை.

பச்சைபட்டாணியில் உள்ள சத்துக்கள்

பச்சை பட்டாணி100கிராம்)யில் கார்போஹைட்ரேட் 14.45கி, சர்க்கரை 5.67கி, நார்ச்சத்து 5கி, புரதம் 5.42கி, கொழுப்பு 0.4கி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. பீட்ட கரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சி, கே மற்றும் பி காம்ளக்ஸ் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. சோடியம்,இரும்பு, கால்சியம்,மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம்,ஜின்க் போன்ற தனிம சத்துக்களும் இதில் உள்ளன.

இதோ பச்சை பட்டாணியில் ஒரு ரெசிபி…

DSCN1823

பச்சை பட்டாணி பொரியல்

தேவையானவை:

உரித்த பட்டாணி – ஒரு கிண்ணம்

பெரிய வெங்காயம் – 2

காய்ந்த மிளகாய் – 2

சீரகம் – அரை தேக்கரண்டி

கடுகு – கால் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு

எண்ணெய் – கால் கிண்ணம்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பட்டாணியை வேக விட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும். காய்ந்த மிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும் இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணியையும், உப்பையும், அரைத்த மசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும்

.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.